தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டாக்டர் ஆப் பார்மசி

டாக்டர் ஆப் பார்மசி

டாக்டர் ஆப் பார்மசி


செப் 26, 2009 12:00 AM

செப் 26, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 26, 2009 12:00 AM செப் 26, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பார்மசி படிப்பு மிகப்பெரிய மாறுதல்களுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆறு ஆண்டு பார்ம் டி., ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பு, பார்மசி கல்வியை சர்வதேச தரத்துக்கு எடுத்துச்செல்லும் என மருந்தியல் கல்வி நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த புதிய படிப்பின் மூலமாக இந்தியாவில் மருந்தியல் கல்வி மற்றும் நடைமுறைகளின் தரத்தை உயர்த்த முடியும் என இந்திய பார்மசி கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த பட்டம் அமையும்.

‘டாக்டர் ஆப் பார்மசி’ எனப்படும் பார்ம் டி., படிப்பு அமெரிக்காவில் 1955ம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் இந்த படிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டே அமெரிக்காவின் பெரும்பாலான பார்மசி கல்லூரிகள், பி.பார்ம்., எம்.பார்ம்., பி.எஸ்., பார்மசி, எம்.எஸ்., பார்மசி படிப்புகளை வழங்குவதை நிறுத்திவிட்டன.

உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் இரண்டாண்டு டிப்ளமோ படிப்பான டி.பார்ம்., வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்த படிப்புக்கு எந்த மதிப்பும் இல்லை. நவீன சுகாதார அமைப்பில் பணியாற்ற பி.பார்ம்., படிப்பும் கூட போதுமானது அல்ல. பல இடங்களில் பயிற்சி பெற்ற பார்மசிஸ்ட்கள் மருந்து வழங்கும் பணியில் நியமிக்கப்படுவது இல்லை.

ஒரு சுகாதார அமைப்பில் பார்மசிஸ்ட்களே முதல் தொடர்பு புள்ளியாக இருக்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை மருந்துகளை எடுத்துத்தரும் கடைசி தொடர்பு புள்ளியாகவே அவர்கள் உள்ளனர். பார்மசிஸ்ட்களின் அனுபவத்தை மருத்துவத்துறைக்கு பயன்படுத்தும் முதல் முயற்சியாகவே பார்ம் டி., படிப்பு அறிமுகமாகியுள்ளது.

இந்தியா முழுவதும் 24 பார்மசி கல்லூரிகளில் பார்ம் டி., படிப்புகளை நடத்த பார்மசி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் ஏழு தமிழகத்திலும், ஆறு கர்நாடகாவிலும், எட்டு ஆந்திராவிலும், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் தலா ஒரு கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பார்ம் டி., படிப்பை நடந்த அனுமதி பெற விரும்பும் கல்லூரிகளில் குறைந்தது 350 படுக்கைகளுடன் மருத்துவமனை இருக்க வேண்டியது அவசியம். இந்த ஆறு ஆண்டு படிப்பில் மருத்துவமனை மற்றும் சமூகத்தை அடிப்படையாக கொண்ட ஐந்து ஆண்டு பார்மசி படிப்பும், ஒரு ஆண்டு மருத்துவமனை பயிற்சியும் வழங்கப்படுகிறது.  மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுடன், பார்ம் டி., மாணவர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். படிப்பின் முடிவில் மருத்துவர்களுக்கு இணையாக தேர்ந்த கிளினிக்கல் பார்மசிஸ்ட்களாக வெளிவருகின்றனர். பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் குறித்து பார்ம் டி., படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. நோயாளிகளுக்கு மருந்துகளின் டோஸ், பக்கவிளைவு குறித்து இவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கு இணையான பார்ம் டி., படிப்பில், நோய் அறிதல் முறைகள், சிகிச்சை முறைகள், மருந்து செலுத்தும் முறைகள்,
தெராபிடிக்ஸ் அவுட்கம், பார்மகோ எகனாமிக்ஸ், பார்மகோ தெரபி ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. ஒரு பேட்சில் 30 மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள பார்மசி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த படிப்பில் வழக்கமான பார்மசி பாடங்களுடன், கிளினிக்கல் பார்மசி குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் இதற்கான பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

பிளஸ் 2 அல்லது டி.பார்ம்., முடித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேர முடியும். பி.பார்ம்., எம்.பார்ம்., பட்டதாரிகளும் இதில் சேர முடியும். அவர்களுக்கு கல்விக்காலம் மூன்று ஆண்டுகள். இந்த படிப்பின் மூலம் இந்தியாவில் பார்மசி நிறைவு செய்யும் மாணவர்கள் வெளிநாட்டிலும் சாதிக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us