அக் 10, 2009 12:00 AM
அக் 10, 2009 12:00 AM
அ நிறம் | அளவு
ஹாஸ்பிடாலிட்டி துறை இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்த துறையில் மனித வளம் பெருகவில்லை. சொகுசு கப்பல்களில் கடற்பயணம் செய்வதும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பான கல்வி வழங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனினும் இவை ஹாஸ்பிடாலிட்டி தொடர்பான அடிப்படை கல்வியை மட்டுமே வழங்குவதால், கப்பல்களுக்குதேவையான ஹாஸ்பிடாலிட்டி கல்வியை வழங்குவதில்லை.
இந்த தேவையை நிறைவு செய்ய ஆர்க் ஷிப்பிங் அண்டு மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன், இந்திய சுற்றுலா மேம்பட்டு கூட்டமைப்பும் இணைந்து குருயிஸ் ஹாஸ்பிடாலிட்டி கோர்ஸ் என்ற படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
கப்பல் வாழ்க்கை, பணியாளர் நடத்தை, பாதுகாப்பு நெறிமுறைகள், ஆபத்து கால நடைமுறை உணவு விடுதி கையாளுவது தொடர்பான கல்வி இதில் வழங்கப்படுகிறது. வகுப்பறை கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகளை உள்ளடக்கிய படிப்பு இது என்பதால், கப்பல் பயணமும் இந்த படிப்பில் அடங்கும். கடல் மற்றும் கப்பல் சார்ந்த படிப்பு இது என்பதால், கோவாவில் நடத்தப்படுகிறது. ஹாஸ்பிடாலிட்டி படித்து வரும் மாணவர்கள் கப்பலில் ஏறியதும் முதல் சில நாட்கள் பதட்டமாக உணர்வார்கள். அதை தவிர்க்கும் வகையில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.
கப்பலில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிய பயிற்சிகளும் இந்த படிப்பில் வழங்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர ஹோட்டல் மேனேஜ் மென்ட்டில் பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். இதற்கான காலம் நான்கு மாதங்கள். இந்த படிப்புக்கான கட்டணமாக 23 ஆயிரம் ரூபாய்
வசூலிக்கப்படுகிறது. இது நான்கு வார படிப்பு.
இந்த படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு இந்திய சுற்றுலா மேம்பாட்டு கூட்டமைப்பே வேலை வழங்குகிறது. மேற்பார்வையாளராகவோ, உதவி சமையல் பணியாளராகவோ கப்பல்களில் நியமிக்கப்படுகின்றனர். தொடக்கத்தில் மாத சம்பளமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றனர். எனினும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை டிப்சாகவே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
