அக் 10, 2009 12:00 AM
அக் 10, 2009 12:00 AM
அ நிறம் | அளவு
அது போல அடிப்படை அறிவியல் படிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தொடங்கிய கல்வி
நிறுவனம் தான் இந்தியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் (ஐ.ஐ. எஸ்.இ.ஆர்.,). இந்தியா முழுவதும் ஐந்து இடங்களில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., அமைந்துள்ளது.
புனேயின் நேஷனல் கெமிக்கல் லேபரட்டரி வளாகத்தில் இருந்து புனே ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., செயல் பட்டுவந்தது. மகாத்மா காந்தி ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் நிறுவனக்கட்டடத்தில் மொகாலி ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., செயல் பட்டது. தற்போது இவை தங்களுக்கென
தனியான வளாகங்களை அமைந்துக் கொண்டன. ஐ.ஐ.எஸ். இ.ஆர்., கோல்கட்டா ஏறத்தாழ 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு ஒருங்கிணைந்த பி.எஸ்., எம்.எஸ்., படிப்பு, 2 ஆண்டு எம்.எஸ்., பிஎச்.டி., ஒருங்கிணைந்த பிஎச்.டி., டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கான ஆராய்ச்சி
படிப்புகளும் உள்ளன.
போபால், மொகாலி, புனே, திருவனந்தபுரம் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,களில் ஒருங்கிணைந்த எம்.எஸ்., படிப்பும், பிஎச்.டி., படிப்பும் உள்ளது. இதற்கு இணையான என்.ஐ.எஸ்.இ.ஆர்., புவனேஸ்வரில் தொடங்கப் பட்டுள்ளது. இது 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., பிஎச்.டி., படிப்புகள், பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகள் இல்லை. என்.ஐ.எஸ். இ.ஆர்., 800 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., என்.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் அணுசக்தி துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இதுவரை ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,ல் சேர கிஷோர் வைக்யானிக் புரோட் சஹான் யோஜனா, இந்தியன் நேஷனல் ஒலிம்பியாட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் நடந்தது. அடுத்த ஆண்டு முதல் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,இல் சேர தனியான நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. என்.ஐ.எஸ்.இ.ஆர்.,ல் சேர நேஷனல் என்ட்ரன்ஸ்
ஸ்கிரீனிங் டெஸ்ட் எழுத வேண்டும்.
