தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/திறன்களின் அவசியம் அறிவோம்....

திறன்களின் அவசியம் அறிவோம்....

திறன்களின் அவசியம் அறிவோம்....


அக் 10, 2009 12:00 AM

அக் 10, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 10, 2009 12:00 AM அக் 10, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திறன்கள் அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் படிக்கும் போதே என்னென்ன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நமக்குள் எப்போதும் கேள்விகளை எழுப்புகிறது அல்லவா?

படித்துக் கொண்டு இருக்கும் ஒருவர் எப்படி அவரது திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்? பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., போன்ற பட்டப்படிப்பு படிப்பவர் கூடுதலாக முதலாமாண்டிலிருந்தே கம்ப்யூட்டர் திறன்களைப் பெறும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும். பி.ஏ., படிப்பவராக இருந்தாலும் பி.காம்., படிப்பவராக இருந்தாலும் ‘டேலி’ போன்ற அக்கவுண்டிங் சாப்ட்வேர்களில் திறன் தேவை.
இது போன்ற அக்கவுண்டிங் பேக்கேஜ்களோடு என்டர்பிரைஸ் ரிசோர்ஸ் பிளானிங் எனப்படும் நவீன அலுவலக சாப்ட்வேர் தொகுப்பை அறிவதும் மிக அடிப்படை அவசியமாகும். கணக்கு நமக்கு வராது என்பதால் தானே கலைப் பிரிவு எடுத்தோம் என்றெலாம் தயங்க வேண்டாம்.
கம்ப்யூட்டரில் இது போன்ற பிரிவுகளைப் படிப்பதற்கு அடிப்படைக் கணிதத் திறன் பெற்றால் போதும். நீங்கள் பயப்படும் அளவுக்கு கடுமையான கணிதம் இருக்குமோ என்ற பயமெல்லாம் தேவையில்லை.
அறிவியல் பிரிவு பட்டப்படிப்பு படிப்பவருக்கு சி, சி++ போன்ற மொழிகளில் திறன் தேவை. படிக்கும் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே படித்தவரிடம் அந்த நிறுவனத்தின் பயிற்சித் தரத்தைப் பற்றி நன்றாக விசாரித்த பின்பே சேர வேண்டும். பெரும்பாலான கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் முதலில் சிறப்பாக நடத்தத் தொடங்கி பின்பு பாதை மாறி மாணவர்களுக்கு பயன் தராமல் போகின்றன.
எந்தப் பிரிவு படிப்பவராக இருந்தாலும் அடிப்படையில் தப்பு இல்லாத ஆங்கில மொழித் திறன் கட்டாயம் தேவை. பேசும் திறன், இலக்கணம், வார்த்தை பயன்பாடு, எழுதும் திறன் ஆகியவற்றைப் பட்டப்படிப்பு முடிக்கும் போதாவது பெற்றிருப்பது அறிவுறுத்தப்படுகிறது.
அடிப்படை ஆப்டிடியூட் டெஸ்டுகளில் பரிச்சயம் பெற்று திறன் பெறுவதும் அவசியமாகும். சில தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் இங்கே கூறப்பட்டுள்ளவற்றை ஏற்கனவே தங்களது பாடத்திட்டத்திலேயே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஆங்கில செய்தித்தாள் வாசிப்பது, செய்திகளைப் பார்ப்பது, கேட்பது, ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பது ஆகியவையும் அவசியமாகும். இவற்றை இரண்டு மாதங்களிலோ 3 மாதங்களிலோ பெற முடியாது.
பொது அறிவு என்பது எல்லோரிடமும் பொதுவாக எதிர்பார்க்கப்படும் அறிவு என்பதால் உங்களைச் சுற்றி நடப்பதையும் நடந்ததையும் தெரிந்து கொள்வது மிக அவசியம். எனவே வரலாறு, புவியியல், அறிவியல் என்று இவற்றில் அடிப்படை விஷயங்களை எப்போதும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது பொது அறிவைப் பொறுத்த வரை மிகவும் பொருந்தக் கூடிய பழமொழி.
விளையாட்டாக பொது அறிவை கற்றுக் கொள்ள முயற்சியுங்கள். இவை நீண்ட காலத்திற்கு மனதிலேயே தங்கும் என்பதுடன் பெரிய சிரமங்கள்இல்லாமல் எளிதில் நமது பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us