தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆய்வுக்கூடங்களில் பிராட்பேண்ட் இணைப்பு

ஆய்வுக்கூடங்களில் பிராட்பேண்ட் இணைப்பு

ஆய்வுக்கூடங்களில் பிராட்பேண்ட் இணைப்பு


அக் 16, 2009 12:00 AM

அக் 16, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 16, 2009 12:00 AM அக் 16, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தகவல் தொழில் நுட்பத் துறையின் நவீன மாற்றங்களுக்கு வித்திட்ட சாம் பிட்ரோடாவை அறியாதவர் இல்லை. தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவரான இவர் உள்கட்டமைப்பு, தகவல் மற்றும் புதுமைகளுக்கான பிரதமருடைய ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார். உள்கட்டமைப்பு,  சுகாதாரம் நீதி மற்றும் தகவல் துறை தொடர்பான தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பங்களில் பிரதமருக்கு இவர் ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

தேசிய அறிவுசார் வலையமைப்பையும் பிராட்பேண்ட் இணைப்பையும் ஒருங்கிணைத்து சாதாரண குடிமக்களுக்கு சிறப்பான சேவை தர திட்டமிட வுள்ளதாக இந்த புதிய பதவிக்கு நியமிக்கப்பட்ட பின் தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகள் புதுமைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான ஆண்டுகளாக இருக்கும் விதத்தில் செயல் திட்டம் தீட்டி வருவதாக இவர் கூறியுள்ளார். இந்தியத் தனிநபர் அடையாள அட்டைக்கான அமைப்பின் தலைவராக இன்போசிஸ் இணைத் தலைவர் நந்தன் நீல்கேனி நியமிக்கப்பட்டபின் சாம்பிட்ரோடாவின் இந்த புதிய பதவிக்கான நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவராக பிட்ரோடா வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் உயர்கல்வி, ஆரம்பக் கல்வி, ஆரோக்கியம், விவசாயம், பாரம்ப-ரிய மருத்துவம் ஆகிய துறைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத் தங்கள் குறித்து விவாதிக்கிறது. இவர் வழங்கிய பல்வேறு பரிந்துரைகளை செயல்
படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பிட்ரோடாவின் பரிந்துரையின் பேரில் தேசிய அறிவுசார் வலையமைப்பு உருவாக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கூடங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
ராஜிவ் பிரதமராக இருந்தபோது தொலைத் தொடர்பு தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்ட பெருமைக்குரியவர் சாம் பிட்ரோடா. பி.சி.ஓ., எனப்படும் பொதுத் தொலைபேசி இணைப்பகங்களை வழங்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் பேசிட அடிகோலியவரும் இவர்தான். சாம்பிட்ரோடாவுக்கு அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளுக்கான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி நினைவாக தரப்படும் உலக இந்தியர் என்னும் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us