தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எழுச்சி பெறுமா ஐ.டி., துறை?

எழுச்சி பெறுமா ஐ.டி., துறை?

எழுச்சி பெறுமா ஐ.டி., துறை?


நவ 05, 2009 12:00 AM

நவ 05, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 05, 2009 12:00 AM நவ 05, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஐ.டி., துறை தான். ஆனால் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் கடந்த சில வாரங்களாக இந்த நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணத் தொடங்கியுள்ளன.

புகழ் பெற்ற பொறியியல் கல்லூரிகளை மட்டுமின்றி நடுத்தரக் கல்லூரிகளையும் நாடி மீண்டும் ஐ.டி., நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ முறை மூலமான வேலை வாய்ப்புகளுக்காக செல்லத் தொடங்கியுள்ளன. டி.சி.எஸ்., விப்ரோ, இன்போ-சிஸ், ஐ.ஐ.பி., சிஸ்கோ, சாபியன்ட், ஐ.பி.எம்., கன்வர்ஜிஸ் பி.பி.ஒ., சிம்பனி சர்விசஸ் என்று ஐ.டி., மேஜர் நிறுவனங்களில் பெரும்பாலானவை வரும் நாட்களில் கேம்பஸ் முறை மூலமாக அதிகப் பேரை பணிக்கு எடுத்துக் கொள்ள விருப்பதாக துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.எம்.எஸ்., கல்லூரியில் படித்து வரம் மாணவர்கள் 800 பேரில் ஏற்கனவே 100பேருக்கு பணி நியமன உத்தரவுகள் தரப்பட்டு விட்டன. ஜனவரியில் படித்து முடிக்கவுள்ளவர்களில் பெரும்பாலானவருக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய வாய்ப்புள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் தற்போது இறுதியாண்டு பொறியியல் படிப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் நெட் ஆப், எச்.பி.,அரிசண்ட், கோல்ட்மேன் சேக்ஸ், இன்போசிஸ், விப்ரோ, மைண்ட்ட்ரீ, எச்.ஏ.எல்., பி.இ.எம்.எல்., போன்ற நிறுவனங்களில் பணி வாய்ப்புககளைப் பெறவுள்ளனர்.

பொதுவாக ஐ.டி., நிறுவனங்கள் இறுதியாண்டு மாணவர்களைக் குறி வைத்து நகருகின்றன. ஆனால் ஏற்கனவே பொறியியல் முடித்தவர்கள் அனுபவம் காரணமாக தங்களுக்கே பணி வாய்ப்புகளில் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பி.பி.ஓ., நிறுவனங்கள் வராததாலும் டாலரின் மதிப்பு வீழ்ந்து வருவதாலும் மாணவர்களின் எதிர்பார்ப்பும் மாறியிருக்கிறது. முன்பு போல அல்லாமல் தற்போது ஆண்டுக்கு ரூ.1.8 லட்சம் முதல் ரூ.5 லட்சத்துக்குள் சம்பளம் கிடைத்தால் போதும் என்றே பெரும்பாலான மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது நம்பிக்கை தரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் ஐ.டி., நிறுவனங்கள் இந்தியாவில் விரிவாக்க முயற்சிகளில் மும்முரமாக உள்ளன. கடந்த 2 காலாண்டுகளாக அவுட்சோர்சிங் துறையில் பெரும் வளர்ச்சி மீண்டும் காணப்படுகிறது. இந்த நிலையில் மனித வள பற்றாக்குறையினால் வாய்ப்புகளை இழப்பதை அந்த நிறுவனங்கள் விரும்பாத காரணத்தால் புதிய பணி நியமனங்களில் தீவிரமாக இறங்கியுள்ளன.

எனினும் பொதுவாகவே மாணவர்களிடம் நிறுவனம் குறித்த குறைவான விழிப்புணர்வு ஒரு குறையாகவே அறியப்படுகிறது. ஏற்கனவே படிப்பை முடித்தவர்களில் பலரும் உயர்கல்வியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஐ.டி., மாணவர்களுக்கு நம்பிக்கை தருவதாகவே அமைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us