தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஐ.ஐ.டி., மதிப்பீட்டு முறையால் சிக்கல்

ஐ.ஐ.டி., மதிப்பீட்டு முறையால் சிக்கல்

ஐ.ஐ.டி., மதிப்பீட்டு முறையால் சிக்கல்


நவ 05, 2009 12:00 AM

நவ 05, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 05, 2009 12:00 AM நவ 05, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிராமப்புற பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் இந்த முடிவால் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் ஐ.ஐ.டி.,க்களில் இவர்கள் சேருவது குறையும் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

தேர்வுகளை நடத்தும் மாநில போர்டுகளின் மதிப்பீட்டு முறையில் அதிக மாறுபாடு நிலவும் சூழலில் ஐ.ஐ.டி., எப்படி சரியான மாணவரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உதாரணமாக டில்லி செகண்டரி போர்ட் நடத்தும் தேர்வுகளில் ஒருவர் எளிதாக 80 சதவீத மதிப்பெண்ணைப் பெற முடியும். ஆனால் மே.வங்க மாநில போர்ட் நடத்தும் உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே 80 சதவீத மதிப்பெண்ணைப் பெறுகின்றனர்.

ஐ.ஐ.டி., பயிற்சி மையங்களின் தேவையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக மதிப்பெண் கூடுதலாகப் பெற வேண்டும் என்ற யோசனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சகம் கூறினாலும் கல்வி நிறுவனங்கள் ஆரோக்கியமற்ற முறைகளில் ஈடுபடும் சூழலை இது ஏற்படுத்தும் என்றே கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஐ.ஐ.எம்.,களில் சேர நடத்தப்படும் கேட் தேர்வை எழுத 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும் என்றிருக்கும் போது ஐ.ஐ.டி.,க்களின் நுழைவுத் தேர்வை எழுத 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்தால் அது தேவையற்ற சிக்கலை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் நிலையே எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us