நவ 24, 2009 12:00 AM
நவ 24, 2009 12:00 AM
அபாகஸ் கல்வி மூலம் கடினமான கணக்குகளையும் நொடிப்பொழுதில் எளிமையாக முடிக்க முடியும். இதன் மூலம் கணிதம் பிடிக்காதவர்களுக்கு கூட கணிதத்தின் மீது காதல் வந்து விடும்.
சீனக்காரர்களால் தான் அபாகஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனர்கள் யாரும்
கால்குலேட்டர் பயன்படுத்துவதில்லை மாறாக அபாகஸ் மனக் கணிதத்தின் மூலமாக தான் கணக்குகளை செய்கின்றனர். தற்போது நம்முடைய வாழ்க்கை முறை இயந்திரத்தை சார்ந்ததாக மாறிவிட்டது. இதனால் நம்முடைய குழந்தைகள் எந்த வேலையையும் செய்யாமல் ரோபோக்களை போல ஆகி விடுவார்கள் என்ற பயம் நம்மிடம் இருக்கிறது.
குழந்தைகளுடைய மூளை செல்கள் சிறப்பாக செயல்பட இந்த அபாகஸ் பயிற்சி தேவைப்படுகிறது. மனிதனுடைய 80 சதவீத மூளை வளர்ச்சி 2 வய-தில் இருந்து 12 வயதிற்குள் தான் இருக்கிறது. இதனால் அபாகஸ் பயிற்சியானது இந்த வயதை உடைய குழந்தைகளுக்கு தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இப்பயிற்சி பெறுவதின் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றல், வேகம், துல்லியம், கவனிக்கும் திறன் போன்றவை
அதிகரிக்கிறது.
யூசி மாஸ் மற்றும் ஐடியல் பிளே அபாகஸ் ஆகிய இரண்டும் தான் தமிழகத்தில் உள்ள முக்கியமான அபாகஸ் பயிற்சி நிறுவனங்கள் ஆகும். அபாகஸ் பயிற்சி பெற்று சொந்தமாக பயிற்சி மையங்கள் தொடங்கி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க நிறைய பேர் விரும்புகிறார்கள். குறிப்பாக பெண்கள் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதுவரை ஏராளமானோர் சொந்தமாக பயிற்சி மையங்கள் தொடங்கி இருக்கிறார்கள். அபாகஸ் கற்றுக் கொள்வதற்கு பிளஸ் 2 படித்திருந்தாலே போதுமானது. அபாகஸ் எட்டு நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் மூன்று
மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு நிலையாக படித்துக் கூட மாணவர்களுக்கு கற்பிக்கலாம்.
தமிழக அரசு அபாகஸ் கல்வி முறையை அனைத்து பள்ளிகளிலும்
அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.
பயிற்சி நிறுவனங்கள்
* யூசிமாஸ் மென்டல் அரித்மேட்டிக் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்
வெப்சைட்: www.ucmaindia.com
* ஐடியல் பிளே அபாகஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
வெப்சைட்: www.playabacusindia.com
