தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நுழைவுத்தேர்வுக்கு தயாராகிறீர்களா

நுழைவுத்தேர்வுக்கு தயாராகிறீர்களா

நுழைவுத்தேர்வுக்கு தயாராகிறீர்களா


நவ 25, 2009 12:00 AM

நவ 25, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 25, 2009 12:00 AM நவ 25, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதைப்போல் நுழைவுத்தேர்வுகளுக்கும் தயாராகின்றனர். மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில் சிறந்த கல்லூரிகளில் சேருவதற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனால் பெரும்பாலான மாணவர்கள், நுழைவுத்தேர்வுகளுக்கு கடைசி கட்டத்தில் தான் தயாராகின்றனர்.   இதனால் நல்ல மதிப்பெண்களை பெற ஒரு நாளுக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமாக படிக்கின்றனர். இப்படி படிப்பது நல்லதல்ல. பொது நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராவது நிபுணர்கள் கருத்துக்கள்:
மாணவர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கக்கூடாது. இடையில் ஏதாவது மனதுக்கு இதம் தரும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சுயமாக சிந்திக்க விட வேண்டும். சிறந்த புத்தகங்களையும் படிக்கவும், ஆரோக்கியமான டிவி நிகழ்ச்சிகளையும் காணவும் அனுமதிக்க வேண்டும்.
வீட்டில் உள்ள சூழ்நிலை மிக முக்கியமானது. அதை பொறுத்துத்தான் பிள்ளைகளின் குணங்கள் இருக்கும். மேலும் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும் கற்றுத்தர வேண்டும். ஆனால் அவை மட்டும் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிதராது.
வகுப்பறையில் ஆசிரியர் தரும் அறிவும் சேரும் போதுதான் அவர்கள் முழு மனிதர்களாக மாற முடியும். சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது அதிக எதிர்பார்ப்பை திணித்து, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் குறுக்கிடுவர் இது ஆபத்தானது, அல்லது கண்டு கொள்ளாமலேயே விட்டு விடுவர், இது மிகவும் ஆபத்தானது. பெற்றோர் அணுகுமுறை முக்கியமானது.   இது பிள்ளைகளின் படிப்பு பற்றி பெற்றோர்களுக்கான அறிவுரை. மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் வெற்றி கிடைக்கும். ஆனால் அப்படி படிக்க தேவையில்லை. திட்டமிட்டு படித்தாலே போதும். எட்டாவது, ஒன்பதாவது வகுப்புகளிலேயே திட்டமிட வேண்டும்.
படிப்பினுடைய சாராம்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். சில மாணவர்கள் திறமை இருந்தும் வெற்றி பெறுவதில்லை. அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக தன்னால் முடியுமா? என்ற சந்தேகம், இரண்டாவதாக தன்னால் மட்டும் தான் முடியும் என்ற கர்வம், இப்படியும் இருக்கக்கூடாது. மூன்றாவதாக எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்வது.
இந்த மூன்றையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் எல்லா விதமான தேர்வுகளிலும் மாணவர்கள் எளிதில் வெற்றி பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us