தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நர்சிங்: வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு

நர்சிங்: வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு

நர்சிங்: வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு


நவ 25, 2009 12:00 AM

நவ 25, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 25, 2009 12:00 AM நவ 25, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் நர்சிங் கல்வியை இந்திய நர்சிங் கவுன்சில் நிர்வகித்து வருகிறது.

இந்திய நர்சிங் கவுன்சில் 1857ம் ஆண்டு நைட்டிங்கேல் அம்மையாரால் ஹெல்த் ஆப் ஆர்மி இன் இந்தியா என, ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான தனிக் குழு 1859 ம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1868 ல் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. இது இந்தியன் நர்சிங் கவுன்சிலாக 1947 ம் ஆண்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. நர்சிங் கவுன்சில் முதலில் மெட்ரிக் அடிப்படையில் தேர்வு நடைபெற்றது. பின்பு இந்தியாவில் 19 மாநிலங்களில் இந்திய நர்சிங் கவுன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நர்ஸ்களின் பணி இன்றியமையாததாக உள்ளது. அதனால் மருத்துவமனையில் நர்ஸ்களுக்கு ஒய்வு என்பது இல்லாத ஒன்றாகி விட்டது. நர்சிங் துறையில் கிளினிகல் நர்ஸ், கிளினிகல் நர்ஸ் ஸ்பெசலிஸ்ட், அட்வான்ஸ் பிராக்டிஸ் நர்ஸ், இண்டிபென்டட் நர்ஸ், சேர்டிபெய்டு நர்ஸ் மிட் ஒய்ப், நர்ஸ் எஜூகேட்டர், நர்ஸ் அட்மினிஸ்டிரேட்டர், மற்றும் நர்ஸ் ரிசர்சர், பல பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நர்ஸ்களின் பணி மெடிக்கல் மேனேஜ்மென்ட், சர்ஜிகல் மேனேஜ்மென்ட் போன்ற நேரங்களில் உதவிகரமாக இருப்பது மற்றும் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் முழு தகவல்களை பெற வேண்டும். அவர்களுக்கு உடனடியாக என்ன தேவை என்பதை அறிந்து அதை செயல்படுத்த வேண்டும்.

படிப்புகள்

1.ஆக்ஸலரி நர்ஸ் மற்றும் மிட் ஒய்ப்: 1 வருடம் 6 மாதம். தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. டிப்ளமோ ஜெனரல் நர்சிங் மற்றும் மிட் ஒய்பரி: 3 வருடம். 6 மாதங்கள். தகுதி: 10 ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் குறைந்தது 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

3. பி.எஸ்சி., நர்சிங் (ஜெனரல்): 4 வருட காலம். தகுதி, 10 ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் குறைந்தது 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

3. பி.எஸ்சி., நர்சிங்: 2 வருடம். தகுதிகள் 10 வகுப்பு, பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ நர்சிங் மிட் ஒய்பரி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதையே இந்திரா தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தொலைத் தூரக் கல்வியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான காலம் 3 வருடம், தகுதிகள் 10 வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஜி.என்.எம்., துறையில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 2 முதல் வினியோகிக்கப்படும்.

எழுத்து தேர்வு 2010, ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சிலும் மற்றும் தனித்தேர்வு மே மாதத்திலும் நடைபெறும்.

வேலை வாய்ப்பு: வரும் 2010 ம் ஆண்டில் இந்தியாவில் மருத்துவத்துறைக்காக 4 லட்சத்து 50 ஆயிரம் புதிய மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்படும். இதில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன.

பயிற்சி பெற்ற நர்ஸ்களுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அரபு நாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த படிப்பின் சம்பள விபரம்: இந்திய அரசு ஆறாவது ஊதியக்குழுவை அமல் செய்துள்ளது. அதன்படி நர்ஸ்களின் ஆரம்ப கால சம்பளம் ரூ29,000 ஆகும். தனியார் மருத்துவமனைகளில் ஆரம்ப கால சம்பளம் 6,000 முதல் 15,000 வரை இருக்கும். அரபு நாடுகளில் நர்ஸ்களின் மாத சம்பளம் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை கிடைக்கும். அவர்கள் வாரத்திற்கு 36 மணி நேரம் வேலை செய்தால் போதுமானது.

தேசிய அளவில் நர்சிங் படிப்பில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்:

1. காலேஜ் ஆப் நர்சிங், ஆர்ம்டு போர்ஸ் மெடிக்கல் கல்லூரி, புனே.

2. கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்.

3. ராஜ்குமாரி அம்ரித் கவுர் கல்லூரி ஆப் நர்சிங், புது டில்லி.

4. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் எஜூகேஷன் முதுநிலை, இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜூகேஷன் ரிசர்ச், சண்டி-கர்.

மேலும் விபரங்களுக்கு: www.indiannursingcouncil.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us