தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பி.பி.ஓ., துறை எதிர்நோக்கும் சவால்...

பி.பி.ஓ., துறை எதிர்நோக்கும் சவால்...

பி.பி.ஓ., துறை எதிர்நோக்கும் சவால்...


நவ 25, 2009 12:00 AM

நவ 25, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 25, 2009 12:00 AM நவ 25, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் எந்தத் துறைகளில் வேலைகள் உருவாகும் வாய்ப்புள்ளது என்பது குறித்து இன்போசிஸ் நிறுவனத் தலைவர் கோபாலகிரு ஷ்ணன் சமீபத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்மார்ட் கம்ப்யூட்டர்கள் அதிகரிப்பு மற்றும் அனைத்து அலுவலகப் பணிகளுமே இயந்திரமயமாக்கப்படுவது ஆகியவை அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட முழுமையாகிவிடும் என்பதால் பேக் ஆபிஸ் பணிகள் எனப்படும் பி.பி.ஓ., அவுட்சோர்சிங் போன்ற பணிகள் நம் நாட்டிற்குள் வருவது பெருமளவு குறைந்து விடும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

இது போலவே பல நிறுவனங்களில் ஒரு பணியைச் செய்ய 300 பேர் தேவைப்பட்டால் அடுத்த 6 மாதங்களுக்குள் அதே பணியை 100 பேரே செய்து முடித்து விடுவதை நிறுவனங்கள் காண்கின்றன. இப்போதெல்லாம் எலக்ட்ரானிக் முறையில் பணி நிர்வாகம் நடத்தப்படுவதால் மனிதர்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்து விடுகிறது. இது போன்ற பணித் தன்மை மாறுதலானது இந்தியா போன்ற நாடுகளில் ஊழியர்களுக்கான தேவையைக் குறைத்து விடுகின்றன.

இந்தியாவில் பி.பி.ஓ., தொடர்பான பணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பணி புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரின்ட் மீடியா எனப்படும் ஊடகத் துறையில் எலக்ட்ரானிக் மீடியா பயன்பாடு அதிகரித்திருப்பதால் பிரின்ட் மீடியாவில் பணி வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன.

எனவே இந்திய பி.பி.ஓ., துறை பலவிதமான கணிப்புகளை மேற்கொண்டு தன்னை மாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us