தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சமூகத்தை பற்றிய படிப்புகளுக்கு டிஸ்

சமூகத்தை பற்றிய படிப்புகளுக்கு டிஸ்

சமூகத்தை பற்றிய படிப்புகளுக்கு டிஸ்


டிச 01, 2009 12:00 AM

டிச 01, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 01, 2009 12:00 AM டிச 01, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம்  1936 ஆம் ஆண்டு திரு தொரப்ஜி டாடா இளநிலை சமூக அறிவியல் கல்லூரி என்ற பெயரில் துவக்கப்பட்டது.

பின், 1944 ஆம் ஆண்டு டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது. 1964 ஆம் ஆண்டு இந்திய அரசால் நிகர் நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிறுவனம் துவங்கிய நாள் முதல் சமூகத்தை ஆரோக்கியமாக்குவதற்கும், பேணுவதற்கும், சமூக அநீதிகளுக்கு உரிய நீதி கிடைக்கவும் சமூக அறி-வி-யல் சார்ந்த படிப்புகளை ஊக்குவிக்கிறது.

மும்பையை தலைமையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்திற்கு மூன்று கிளை கல்வி நிறுவனங்கள் உள்ளன. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தலைமை நிறுவனத்தில் சமூகப்பணி, உடல் கல்வி, ஊடகவியல் மற்றும் கலாசாரம், உளவியலில் ஆராய்ச்சி போன்ற படிப்புகள் உள்ளன. மும்பையில் மால்டி மற்றும் நவுரோஜி என்ற கிளை கல்வி நிறுவனமும் உள்ளது. இந்நிறுவனம் 11.05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆஸ்மனாபாத்தில் உள்ள துல்ஜாபூரில் ஊரக வளர்ச்சி தொடர்பான படிப்பிற்காக ஒரு கிளை நிறுவனம் 100 ஏக்கரில் அமைந்துள்ளது. மேலும் கவுகாத்தியில் ஒரு கிளை நிறுவனம் உள்ளது.

இது தவிர கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ம் தேதி ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஐதராபாத்தில் டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் தொடங்க அடிக்கல் நாட்டினார். மெகபூப்நகர் மாவட்டத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டு செயல்பட துவங்கும்.

இந்நிறுவனத்தில் உள்ள படிப்புகள்:

பட்ட படிப்புகள்

* பி.ஏ., சமூகப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி

மேற்படிப்புகள்:

* உடற்கல்வி நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம்

* பொது சுகாதாரம்

* எம்.ஏ., உலகமயமாதல்

* எம்.ஏ., மனித உரிமை மற்றும் தொழிலாளர் உறவுகள்

* எம்.ஏ., கல்வி (தொடக்க நிலை)

* எம்.ஏ., டிஸ்எபிலிட்டி

* எம்.ஏ., சமூகப்பணி

* எம்.ஏ., ஊடகம் மற்றும் கலாசாரம் சர்டிபிகேட் படிப்புகள்

* சமூகப்பணி

* உளவியல்

டிப்ளமோ படிப்புகள்

* மருத்துவமனை நிர்வாகம்

* பெர்சனல் மேனேஜ்மென்ட்

* ஜெரன்டாலஜி

இது தவிர எம்,பில்., பி.ஹெச்.டி., படிப்புகளும் இந்த நிறுவனத்தில் உள்ளன.

*பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜனவரி மாதம் முதல் அப்ளிகேஷன் அளிக்கப்படும். மே மாதம் நுழைவுத்தேர்வு நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு

P.O. Box 09,

Tuljapur, Dist.,

Osmanabad 413 601.

தொலை-பேசி: 912471242061/560

இ-மெயில்: infosrd@tiss.edu

* மேற்படிப்பில் சேர்வதற்கு செப்டம்பர் முதல் அப்ளிகேஷன் அளிக்கப்படும். டிசம்பர் மாத இறுதியில் நுழைவுத்தேர்வு நடக்கும். அப்ளிகேஷன் ஆன்லை-னில் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு

DR Academic

Tata Institute of Social Sciences

VN Purav Marg

Deonar

Mumbai 400 088

*முழு நேர எம்.பில்., பிஎச்.டி.,யில் சேர்வதற்கு ஜூன் /ஜூலை மாதங்களில் சேர்க்கை நடக்கும். பிஎச்.டி.,யில் நேரடியாக சேர்வதற்கு ஆண்டிற்கு இரண்டு முறை ( ஜூன்/ஜூலை மற்றும் ஜனவரி / பிப்ரவரி) சேர்க்கை நடக்கும். விவரங்களை www.tiss.edu/mphilphd.pdf தளத்தில் பெறலாம்.

இந்த கல்வி நிறுவனத்தில் பயின்றவர்கள் ஹிந்துஸ்தான் யுனி லீவர், நோக்கியா, நெஸ்லே போன்ற இன்டர்நேஷனல் நிறுவனங்களிலும் ஐ.டி., துறைகளிலும் மனித உரிமை மற்றும் தொழிலாளர் நலன் போன்ற துறைகளில் பணிபுரிகின்றனர்.

இந்த நிறுவனத்தை பற்றி http://www.tiss.edu/index.php என்ற இணைய தளத்தில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us