டிச 01, 2009 12:00 AM
டிச 01, 2009 12:00 AM
அதற்காக விண்ணப்பித்தவர்கள் இறுதிக்கட்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு தேர்வு மையங்கள்
மறக்காமல் தேர்வுக்கு எடுத்துக் செல்ல வேண்டியவை
* 2009 கேட் அட்மிட் கார்டு
* கேட் வவுச்சர்
* புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை (டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அட்டை, கல்லூரி அடையாள அட்டை, தொழிலாளர் அடையாள அட்டை)
* இருப்பிட முகவரி, வயது போன்றவற்றுக்கான சான்றிதழ், கையெழுத்துடன் கூடிய புகைப்படம்
* தேவை இருப்பின் ஜாதிச்சான்றிதழ்
தேர்வு அறையில் அனுமதிக்கப்படாதவை:
* கைக்கடிகாரம்
* பேனா
* மொபைல் போன்
* கால்குலேட்டர்
காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 3.30 முதல் 6 மணி வரையும் தேர்வு நடைபெறுகிறது. கண்டிப்பாக இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
* தேர்வு ஆரம்பித்த பிறகு முடியும் வரை வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* வினாத்தாள் உட்பட தேர்வு அறையில் இருந்து எதையும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
* நாற்காலி, மேஜை சரியில்லை என்றால் தேர்வு துவங்குவதற்கு முன் கண்காணிப்பாளரிடம் கூறி மாற்றிக் கொள்ளலாம். தேர்வு துவங்கிய பிறகு மாற்ற முடியாது.
* சரியான நேரத்தில் தேர்வை முடிக்க வேண்டும். கூடுதல் நேரம் தரப்பட மாட்டாது. நேரத்தை முன்னால் இருக்கும் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
* அடித்தல், திருத்தல் இல்லாமல் விடைத்தாள் இருக்க வேண்டும்.
