2010ம் ஆண்டிற்கான ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு
2010ம் ஆண்டிற்கான ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு
டிச 01, 2009 12:00 AM
டிச 01, 2009 12:00 AM
இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், மும்பை, டில்லி, காந்தி நகர், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், கான்பூர், கராக்பூர், சென்னை, மாண்டி, பாட்னா, ரூர்க்கி ஆகிய ஐ.ஐ.டி.,களில் 2010ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான அட்மிஷனுக்கு ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு நடக்கிறது. நுழைவுத்தேர்வு தேதி: ஏப்ரல் 11, 2010 முதல் தாள்: காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை இரண்டாவது தாள்: மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் இரண்டு வினாத்தாள்கள் உள்ளன. ஒரு வினாத்தாளுக்கு தேர்வு நேரம் தலா 3 மணி. இரண்டு வினாத்தாள்களிலும் வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய மூன்றுக்கும் தனி பிரிவுகள் உள்ளன. வினாக்கள் அனைத்தும் கொள்குறி (Objective type
நுழைவுத்தேர்வுக்கான தகுதிகள்
பிறந்த தேதி: பொது, பிற்பட்டோர் மற்றும் அட்டவணை வகுப்பு பிரிவு விண்ணப்பதாரர்கள் அக்., 1, 1985க்கு பின் பிறந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் உடல் ஊனமுற்றோர் பிரிவு விண்ணப்பதாரர்கள் அக்., 1, 1980க்கு பின் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி பெற்ற வருடம்: பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் அக்., 1, 2008 அல்லது 2009ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மதிப்பெண் சதவிகிதம்: பொது, பிற்பட்டோர் மற்றும் அட்டவணை வகுப்பு பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் குறைந்தது 60 சத-வீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் உடல் ஊனமுற்றோர் பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு: ஜே.இ.இ., தேர்வை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மட்டும் தான் எழுத முடியும். 2009ல் ஆண்டு நீங்கள் முதல் முறையாக எழுதியிருந்தால் 2010ம் ஆண்டும் கலந்து கொள்ளலாம்.
இட ஒதுக்கீடு: ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 15 சதவிகிதமும், பழங்குடி பிரிவினருக்கு 7.5 சதவிகிதமும், பிற்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதமும், ஊனமுற்றவர்களுக்கு 3 சதவிகிதமும் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பம்: விண்ணப்பத்தை ஆன்லைன் அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம்
1. ஆன்லைன்: இந்த முறையில் விண்ணப்பம் செய்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்களை கவனமாக பார்த்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் வங்கி சலான் மூலம் செலுத்தலாம்.
தேர்வுக் கட்டணம்: ரூ.450 - (பொது, பிற்பட்டோர் மற்றும் அட்டவணை வகுப்பு பிரிவு மற்றும் மாணவிகளுக்கு)
ரூ.900 - (மற்ற விண்ணப்பதாரர்களுக்கு)
2.ஆப்லைன்: இந்த முறையில் விண்ணப்பம் செய்பவர்கள் வரையறுக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் அப்ளிகேஷன் (தகவல் கையேடு உடன்) பெற்றுக் கொள்ளலாம்
தேர்வுக் கட்டணம்: ரூ.500 - (பொது, பிற்பட்டோர் மற்றும் அட்டவணை வகுப்பு பிரிவு மற்றும் மாணவிகளுக்கு) லைட் பச்சை நிற கவர் ரூ.1,000 - (மற்ற விண்ணப்பதாரர்களுக்கு) லைட் ஊதா நிற கவர் தகவல் கையேட்டில் (பாடத்திட்டம், தேர்வு மையங்கள், கவுன்சிலிங் , கட்டணம்) உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்கும்.
3. ஹெல்ப்லைன் (சென்னை மண்டலம் மட்டும்) கம்ப்யூட்டர், இன்டர்நெட் ஆகியவற்றை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு குறைந்த பட்ச தேர்வுக் கட்டணத்துடன் ஹெல்ப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 40 சி-எம்சி - ஹெல்ப் லைன் மையங்கள் சென்னை மண்டலம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் விபரங்களுக்கு ஜே.இ.இ., வெப்சைட் அல்லது சிஎம்சி அலுவலக தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் (தொலைபேசி எண்: 044 -22504500).
