தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்வுக்கு தயாராகுங்கள்...

சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்வுக்கு தயாராகுங்கள்...

சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்வுக்கு தயாராகுங்கள்...


டிச 08, 2009 12:00 AM

டிச 08, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 08, 2009 12:00 AM டிச 08, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்துறையில் பயிலும் மாணவர்களும் சற்று கடினம் என்பர்.

துறை வல்லுனர்கள் கருத்துப்படி, ஆரம்பம் முதலே தகுந்த திட்டமிடுதல் மூலமாக இந்த படிப்பை கற்றால் இதை விட சிறந்த, எளிதான படிப்பு இல்லை என்கிறார்கள்.
இன்ஸ்டிடியூட் ஆப் சார்டட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் டி.என்.மனோகரன் , திட்டமிடுதல் மற்றும் அதை செய்து முடித்தல் தொடர்பான வழிமுறைகள் முக்கியமான ஒன்றாகும். சி.ஏ.,தேர்வுக்கு நிலையான தன்மை இருக்காது. ஏனெனில் இந்த படிப்பு தொழிற் சார்ந்த படிப்பாகும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பொருளியல் தொடர்பான அக்கவுன்டிங் படிப்பை படிக்க விரும்புபவர்கள் சி.ஏ., படிப்பை தவறாது முடிக்க வேண்டும்.
நம்முடைய வெற்றிக்கு ஆர்வம் (Interest), அறிவுத்திறம் (Intelligence), ஈடுபாடு (involvement) ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியமானதாகும். இந்த படிப்பில் தான் சேர வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ததில் இருந்து மனதின் வீரியம் குறையாமல் ஆர்வத்துடன் பயில வேண்டும். அறிவுத்திறம் பற்றி நிபுணர்கள் கூறுகையில், சிறந்த அறிவு பெற்றவர்கள் தான் சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆகலாம் என்ற கூற்று தவறான ஒன்றாகும்.   கிராமப்புறங்களில் இருந்து வந்த மாணவர்களில் பலர் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று இன்று நல்ல நிலைமையில் உள்ளனர். சராசரியான அறிவுத்திறம் இந்த தேர்வில் வெற்றி பெற போதுமான ஒன்று.
ஈடுபாடு என்பது மிகவும் முக்கியமானது. ஈடுபாட்டுடன் செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றியை அளிக்கும். மாணவர்கள் திட்டம் வகுத்து ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பயில வேண்டும். மாணவர்கள் சி.ஏ.,தேர்வுக்கு செல்லும் முன் மூன்று வகையான சுற்றுகளுக்கு தயாராக வேண்டும்.
முதலில், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தையும் ஆரம்பம் முதல் முடிவு வரை முழுமையாக படிக்க வேண்டும். இதன் மூலம் அந்த பாடத்தின் மீது உள்ள பயம் நீங்கி பரிச்சயமான ஒன்றாகும்.
இரண்டாவதாக, எல்லா பாடங்களையும் ஆழ்ந்து படிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் கணிதம் செய்து பார்க்க வேண்டும்.
மூன்றாவதாக, படித்த பாடங்களை அன்றே திரும்பிப் பார்க்க வேண்டும். இதன் மூலம் படித்த பாடங்கள் மனதை விட்டு நீங்காமலிருக்கும். நீங்களாகவே, மாடல் தேர்வு கேள்வித்தாளை தயார் செய்து தேர்வு எழுத வேண்டும். ஒரு மாடல் தேர்வு எழுதுவது, பாடபுத்தகங்களை 10 முறை திரும்பிப் பார்ப்பதற்கு சமமான ஒன்றாகும்.
அனைத்தையும் விட சிறந்த ஒன்று விடாமுயற்சி. விடாமுயற்சி என்பது கடின உழைப்பினால் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சி.ஏ., தேர்வு என்பது ஒரு நிறுவனத்தின் இருப்புநிலை ஏட்டை சரிபார்ப்பது மட்டும் ஆகாது. மாணவர்களின் மூன்று அல்லது நான்கு வருட அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை பொறுத்தது. ஏனெனில் கடின உழைப்பின் மூலம் தேர்வில் வென்றால் ஒரு சில ஆண்டுகளில் , மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us