தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆசிரியர்களுக்காக விர்ச்சுவல் அகாடமி

ஆசிரியர்களுக்காக விர்ச்சுவல் அகாடமி

ஆசிரியர்களுக்காக விர்ச்சுவல் அகாடமி


டிச 08, 2009 12:00 AM

டிச 08, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 08, 2009 12:00 AM டிச 08, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தரும் கல்வியின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் அடங்கியுள்ளது.   அத்தகைய ஆசிரியர்களின் திறமைகளை மெருகேற்றவும், தேவையான விஷயங்களை கற்றுத் தரவும் இந்த விர்சுவல் அகாடமியை அரசு செயல்படுத்த வேண்டும்.
விர்ச்சுவல் அகாடமி என்பது ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்களும், பேராசிரியர்களும் தங்களுக்கு தெரிந்த செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யவும், தெரியாத செய்திகளை கற்கவும் சிறந்த ஒரு மேடையாக உள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளிலோ, வெளியூர்களிலோ இருக்கும் பேராசியர்களிடம் தேவையான தகவல்களை பெறலாம். ஆசிரியர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்தவாறு பயிற்சி முறைகளை கற்கலாம்.
பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் முன்னாள் செயலர், ஏ.கே.ராத்
கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் இது போன்ற அகடமி ஆசிரியர்களை பயிற்றுவிக்கவும், பயிற்சி நிறுவனங்களின் தட்டுப்பாட்டை போக்கவும் சிறந்த தீர்வாக செயல்படுகின்றன. இத்தகைய விர்சுவல் அகடமி மூலம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியால் தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் தரத்தை உலகளாவிய முறையில் சிறப்பிக்கலாம்.
நாங்கள் ஏற்கெனவே விர்சுவல் அகாடமியின் பயிற்சி வகுப்பில் ஐ.ஐ.டி.,, காரக்பூர் கல்வி நிறுவனத்தை பங்கு பெற செய்தோம். இந்த பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது.
இதைப் போன்ற அகாடமிகள் தங்கள் பங்களிப்பின் மூலம் நேர்த்தியாக வெற்றி பெற்றால், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் இது போன்ற அகாடமிகளை செயல்படுத்தும். இவ்வாறு கூறினார்.
என்.சி.ஈ.ஆர்.டி., வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய நிலவரப்படி, ஐந்து லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.
நம்நாட்டில் உள்ள ஒரு லட்சம் பள்ளிகளில், 44,000 பள்ளிகளில்,அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆர்.எம்.எஸ்.ஏ.,(ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்) திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேவைகள் இருமடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது போன்ற நேரத்தில் விர்சுவல் அகாடமி தங்கள் திறமையை நிருபிக்க வேண்டும்.
என்.சி.ஈ.ஆர்.டி., இயக்குனர் கிருஷ்ணகுமார், நம் நாட்டில் 50 சதவீத கணித ஆசிரியர்கள் பாடத்தில் தெளிந்த மற்றும் போதிய பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
மனித மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து விஷயங்
களையும் உட்கொண்டுள்ள ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை நடைமுறைப்படுத்தி ஆசிரியர் பற்றாக்குறையை போக்கி, திறனுள்ள
ஆசிரியர்களை உருவாக்க முயல வேண்டும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us