டிச 08, 2009 12:00 AM
டிச 08, 2009 12:00 AM
உலகளாவிய புவி வெப்பமயமாதல் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் போன்றவை தொடர்பாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள், தன்னாட்சி அமைப்புகள் போன்ற 127 நிறுவனங்கள் தொடர்ந்து தட்பவெப்பம் குறித்து கவனித்து படித்து வருவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது ஒரு தொடர்ச்சியான முயற்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சுற்றுச்சூழல் குறித்த ஐ.நா., அமைப்பிற்கு இந்த ஆய்வு குறித்த தகவல்கள் தரப்படுவதாகவும் தற்போது நடந்து வரும் பார்லிமென்ட் கூட்டத்
தொடரில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் குறித்து நமது கல்வி
நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டிருப்பது ஒரு புதிய முயற்சியாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கருதப்படுகிறது.
