தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/லட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சி கல்வி நிறுவனம்

லட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சி கல்வி நிறுவனம்

லட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சி கல்வி நிறுவனம்


டிச 08, 2009 12:00 AM

டிச 08, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 08, 2009 12:00 AM டிச 08, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கல்வி நிறுவனம் இந்திய அரசின் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மூலம் 1957ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனம். விளையாட்டுத் துறையில் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் நாட்டிற்காக சிறந்த விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் உருவாக்கும் நோக்கத்தோடு இந்த கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் ராணி லட்சுமிபாய் நினைவாக துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் உடற் கல்விக்கென இந்திய அரசால் துவங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் ஆகும். இதில் 1957ம் ஆண்டு பட்டப்படிப்பும், 1963ம் ஆண்டு பட்டமேற்படிப்பும், 1980ம் ஆண்டு எம்.பில்., படிப்பும் துவங்கப்பட்டது. விக்ரம் பல்கலைக்கழகத்தின் கிளை கல்லூரியாக ஆரம்பத்தில் செயல்பட்டு வந்த இது, 1964ம் ஆண்டு சிவாஜி பல்கலைக்கழகத்துக்கு கீழ் வந்தது.   இதன் படிப்படியான வளர்ச்சி காரணமாக 1982ம் ஆண்டு தன்னாட்சி அதிகாரம் பெற்றது. பின்னர் விளையாட்டு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று நாட்டின் முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக 1995ம் ஆண்டு உருவெடுத்தது. முதலில் இந்த கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகளாக இருந்தது. பின்னர் 200304ம் கல்வி ஆண்டில் இருந்து நான்கு ஆண்டுகளாக மாற்றப்பட்டது.
பாடப்பிரிவுகள் இதில் பட்டப்படிப்பு பிரிவுகள் மட்டுமல்லாமல் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி துறை ஆகியவையும் இயங்கி வருகின்றன. இது அல்லாமல் சில டிப்ளமோ பாடப்பரிவுகளும், சான்றிதழ் படிப்புகளும் இந்த கல்வி நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது.
பி.பி.எட்., (உடற்கல்வி பட்டப்படிப்பு)
எம்.பி.எட்., (உடற்கல்வி பட்டமேற்படிப்பு)
எம்.பில்., (உடற்கல்வி பற்றிய எம்.பில்., படிப்பு)
பிஎச்.டி., (உடற்கல்வி பற்றிய பிஎச்.டி., படிப்பு)
டிப்ளமோ பாடப்பிரிவுகள்
டிப்ளமோ இன் யூத் அபயர்ஸ்,
டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங்,
டிப்ளமோ இன் யோகா வித் ஆல்டர்னேட் தெரபி
போன்ற டிப்ளமோ பாடப்பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
சான்றிதழ் பாடப்பிரிவுகள்
அட்வென்சர் ஸ்போர்ட்ஸ்,
ஸ்பெசல் ஸ்போர்ட்ஸ்,
யோகா வித் ஆல்டர்னேட் தெரபி
போன்ற சான்றிதழ் படிப்புகளும் இயங்கி வருகின்றன.
மேலும் இந்த கல்வி நிறுவனத்தை பற்றிய தகவல்களை
www.inipe.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us