தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/காலத்தால் அழியாத நுண்கலை

காலத்தால் அழியாத நுண்கலை

காலத்தால் அழியாத நுண்கலை


டிச 29, 2009 12:00 AM

டிச 29, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 29, 2009 12:00 AM டிச 29, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கற்காலத்தில் வாழ்ந்து மறைந்த மூதாதையர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், கருவிகள், தோற்றப்பொலிவு, உணவு பொருட்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த விலங்குகள் என அனைத்தையும் நாம் அக்காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களின் வாயிலாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. கருங்கற்கள், மலை குன்றுகளில் ஓவியங்களை தீட்டியிருந்த அக்கால கலைஞர்கள் இதற்காக பிரத்தியேக பயிற்சிகள் எதையும் மேற்கொண்டதாக எந்த வரலாற்று குறிப்புகளிலும் தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை சுவடுகளை எதிர்கால சந்ததியினர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தில் தங்களுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் தீட்டியிருந்த ஓவியங்கள் இன்று வரலாற்று சான்றுகளாக பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

இவர்களுக்கு பின்னர் மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் ஓவியர்களுக்கென்று தனி மரியாதையும், அந்தஸ்தும் வழங்கப்பட்டன. அந்தப்புரங்களை அலங்கரிக்கும் அழகான ஓவியங்கள் இயற்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற வர்ணங்களால் உயிரோவியங்களாக்கப்பட்டு மாடங்களிலும், திரைச்சீலைகளிலும், சுவர்களிலும் தீட்டப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின் இந்த ஓவியங்களில் இழைக்கப்பட்டுள்ள வர்ணங்கள் பொலிவு குன்றாமல் அழகுற மிளிர்ந்து கொண்டிருப்பது இன்றைய தலைமுறையினர் மத்தியில் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் கலைத்திறன்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

யோகா, தியானம், வாக்கிங், என்ற பயிற்சிகள் ஒருபக்கமும், அழகழகான மீன்களை வளர்ப்பது, பலவகை பூக்கள் நிறைந்த தோட்டங்களை அமைப்பது, பாசத்துடன் பழகும் பறவைகள், விலங்குகளை பராமரிப்பது என மனதினை சாந்தப்படுத்தும், திசைதிருப்பும் வழிமுறைகளை பயன்படுத்தி தீர்வுகாணுமாறு மனோதத்துவ நிபுணர்களால் வகுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஓவியம் தீட்டுவதற்கும் தனிஇடம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வரையப்படும் ஓவியங்கள் அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் சூழலை வெளிப்படுத்தும் கருவியாகவும், <உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விளம்பரப்படுத்தும் சாதனமாகவும், நிறுவனங்களின் பிரத்தியேக தயாரிப்புகளை பிரமாண்டப்படுத்தும் அளவுகோலாகவும், திரைப்படம், புத்தம் புதிய ஆடைகள், வாழ்த்து அட்டைகளில் பதிவு செய்யப்படும் வரைபடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கம்ப்யூட்டரின் வருகைக்கு பின் ஓவியர்கள் புறக்கணிக்கப்பட்டு தாங்கள் விரும்பும் இயற்கை காட்சிகள் எதுவாக இருந்தாலும், அதை எப்படி வேண்டுமானாலும் கிராபிக்ஸ் அடிப்படையில் மாற்றியமைத்து புதிய தோற்றத்தை உருவாக்கி புதிய புரட்சியை தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர்.

அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களுக்கேற்ப ஓவியர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்றைய காலகட்டத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தூரிகையை பிடித்து வந்த ஓவியர்கள் அதை தூரமாக ஒதுக்கி வைத்து விட்டு மவுசை கைகளில் அடக்கிக் கொண்டு கம்ப்யூட்டர் மானிட்டரில் தங்கள் கற்பனைத்திறனோடு புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரையப்பட்ட நவீன ஓவியங்களை அதற்கான பயிற்சி மையங்களில் ஒப்படைத்து தங்கள் திறமையை நிரூபித்து காட்டவேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான ஓவியர்கள் தங்கள் படைப்புகளை அதற்கென அமைக்கப் பட்டுள்ள கண்காட்சிகளில் இடம்பெறச்செய்து பார்வையாளர்களை கவர்வதன் மூலம் தங்களுக்கான அங்கீகாரத்தையும், ஓரளவிற்கு வருமானத்தையும் பெற்று வருகின்றனர்.

ஓவியத்திற்காக துவக்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளில் விளம்பரங்களுக்கான படங்களை வரைவது, மரச்சாமான்களில் கண்கவர் காட்சிகளை பதிவு செய்வது, வீடுகளின் உள்கட்டமைப்பு சுவர்களை அலங்கரிப்பது உட்பட அனைத்து நவீன தொழில் நுட்பங்களும் கற்று கொடுக்கப்படுகின்றன.

கற்பனைத் திறனும் தங்கள் கலையின் மீது தணியாத காதலும் கொண்டிருப்பவர்களால் மட்டுமே இத்துறையில் ஈடுபட்டு புகழினை பெறமுடியும். அனைத்து பள்ளிகளிலும் ஓவியம் வரைவது பொழுதுபோக்கு வகுப்புகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொழில் ரீதியாக ஓவிய பயிற்சி பெற விரும்புபவர்களுக்காக 50 க்கும் மேற்பட்ட பல்கலைகளில் பிரத்தியேக நுண்கலை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமான கல்லூரிகளின் பெயர் விபரம் வருமாறு:

சர் ஜே.ஜே.இன்ஸ்டிட்யூட் ஆப் அப்ளைடு ஆர்ட்ஸ், டாக்டர் டி.என்.ரோடு, மும்பை.

விஸ்வ பாரதி, கலாபவன், விஸ்வ பாரதி யுனிவர்சிட்டி, சாந்திநிகேதன்731235.

பெக்குல்டி ஆப் பைன்ஆர்ட்ஸ், எம்.எஸ்.யுனிவர்சிட்டி ஆப் பரோடா, வதோதரா 390002.

கவர்ன்மெண்ட் காலேஜ் ஆப் ஆர்ட் அண்ட் கிராப்ட், 28 ஜவஹர்லால் நேரு ரோடு, கொல்கத்தா 700016.

காலேஜ் ஆப் ஆர்ட், கவர்ன்மெண்ட் ஆப் என்.சி.டி., ஆப் டில்லி, 2022 திலக் மார்க், நியூ டில்லி 110001.

இந்திர கலா சங்கீத விஸ்வா வித்யாலயா, கைராகர்491881.

நேசனல் மியூசியம் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹிஸ்டரி ஆப் ஆர்ட், கன்சர்வேஷன் அண்ட் மியூசியாலஜி.

நேசனல் மியூசியம், ஜான்பத், நியுடில்லி110011.

பி.எஸ்.சி.,பட்டப்படிப்பில் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவர்.

ஓவியக்கலை வகுப்புகளில் படித்து பட்டம் பெற்றவர்களில் மிகச்சிலரே தங்கள் திறமைக்கான அங்கீகாரம் பெற்று முழுநேர தொழிலாக இதை மேற்கொண்டு வருகின்றனர். புகழ்பெற்ற ஓவியர்களுக்கு ஏராளமாக பணம் வரும் வாய்ப்பு இதன்மூலம் கிடைத்து வருகிறது. இந்த தொழிலின்மீது ஈடுபாடு கொண்ட மாணவர்கள் ஓவியத்துடன் நவீன தொழில் நுட்பங்களை இணைத்து தே
வைப்படும் துறைகளில் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us