தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (என்.டி.ஆர்.ஐ.,), அரியானா

நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (என்.டி.ஆர்.ஐ.,), அரியானா

நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (என்.டி.ஆர்.ஐ.,), அரியானா


ஜன 05, 2010 12:00 AM

ஜன 05, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 05, 2010 12:00 AM ஜன 05, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியானாவில் கர்னால் என்ற இடத்தில், நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில், பால் பண்ணை பற்றிய உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிறுவனம் 1923ம் ஆண்டு, அனிமல் ஹஸ்பண்டரி அண்ட் டெய்ரியிங் என்ற பெயரில் பெங்களூருவில் துவங்கப்பட்டது. பின்னர் 1936ம் ஆண்டு இம்பெரியல் டெய்ரி இன்ஸ்டிடியூட் என்று பெயர் மாற்றும் செய்யப்பட்டது. அரியானா மாநிலம் கர்னாலுக்கு 1955ம் ஆண்டு இது இடமாற்றம் செய்யப்பட்டது. படிப்படியாக வளர்ச்சி பெற்ற இந்த நிறுவனம், 1989ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றது.

இங்கு பால் உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் அதனை கையாளும் விதம், பால் உற்பத்தியில் மனித சக்தியின் பயன்பாடு போன்றவை குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பால் உற்பத்தி, பாதுகாப்பு, வினியோகம் தொடர்பான நடைமுறைகள் பற்றி டெய்ரி டெக்னாலஜியில் கற்றுத்தரப்படுகிறது.

பயோகெமிஸ்ட்ரி, பேக்டீரியாலஜி, நியூட்ரிஷியன் போன்ற அறிவியல் பாடங்களை அடிப்படையாக கொண்ட இன்ஜினியரிங் படிப்பு இது. பால் கெட்டுப் போவதை தடுப்பது, பாலின் சுவை கெடாமல் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.

பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான பேக்டீரியாலஜி, வேதியியல், இயற்பியல், இன்ஜினியரிங் பற்றியும் டெய்ரி டெக்னாலஜிஸ்ட்டுகள் தெரிந்து கொள்கின்றனர். பால் உற்பத்திக்கு உதவும் இனப்பெருக்கம் பற்றியும் பால்வள நிபுணர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கால்நடைகளின் உணவு, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றால் பாலின் அளவில், தரத்தில் ஏற்படும் மாறுதல்கள் குறித்தும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள்

பி.டெக்., (டெய்ரி டெக்னாலஜி)

முதுநிலை பட்டப்படிப்புகள்:
டெய்ரி மைக்ரோ பயாலஜி,
அனிமல் பயோ கெமிஸ்ட்ரி,
அனிமல் பயோ டெக்னாலஜி,
அனிமல் ஜெனிடிக்ஸ் அன்ட் பிரீடிங்,
லைவ் ஸ்டாக் புரடெக்ஷன் அண்ட் மேனேஜ்மென்ட்,
அனிமல் நியூட்ரிசியன்,
அனிமல் சைக்காலஜி,
டெய்ரி எகானாமிக்ஸ்,
டெய்ரி எக்ஸ்டன்சன் அண்ட்
எஜுகேசன் மற்றும் பிஎச்.டி., பாடப்பிரிவும் இங்கு உள்ளது.

டெய்ரி டெக்னாலஜி பாடப்பிரிவு முதன்முதலாக இங்கு 1957ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனம் 2 ஆயிரம் டிப்ளமோ மாணவர்களையும், 1,174 இளநிலை பட்டபடிப்பு மாணவர்களையும், 1903 முதுநிலை பட்டபடிப்பு மாணவர்களையும், 873 பிஎச்.டி., மாணவர்களையும் இதுவரை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தை பற்றி www.ndri.res.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு டெய்ரி டெக்னாலஜிஸ்ட் அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் பணிபுரிய முடியும். பால் பண்ணைகள், கூட்டுறவு அமைப்புகள், கிராம வங்கிகள், பால் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன. ‘குவாலிட்டி கன்ட்ரோல்’ பிரிவுகளில் டெய்ரி டெக்னாலஜிஸ்ட்களுக்கு தேவை உள்ளது.

சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் சிறிய அளவில் பால் பண்ணை, ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றை தொடங்கலாம். எனினும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் சுயதொழில் தொடங்குவதே சிறந்தது. ஆசிரியராகவோ அல்லது ஆராய்ச்சி துறையிலோ கூட பணிபுரிய முடியும். டெய்ரி டெக்னாலஜி பயின்ற மாணவர்களுக்கு டெய்ரி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மட்டுமின்றி மெடிக்கல் இன்ஸ்டியூசன், மற்றும் இது சம்மந்தமான மேலும் பல நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. டெய்ரி படித்த மாணவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளை பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us