தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வாய்ப்புகளை வழங்கும் கப்பல் துறை

வாய்ப்புகளை வழங்கும் கப்பல் துறை

வாய்ப்புகளை வழங்கும் கப்பல் துறை


ஜன 26, 2010 12:00 AM

ஜன 26, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 26, 2010 12:00 AM ஜன 26, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகெங்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் உள்ளதோடு இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றுடன் பல்வேறு துறை முகங்களும் தோன்றிய வண்ணம் உள்ளன. கப்பல் கட்டுமானத் தொழிலில் நேவிகேட்டர், ஹைட்ரோகிராபர், சமையல் வல்லுனர் என மாறுபட்ட பணி வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை கப்பல் துறை பொருளாதாரத் தேக்க நிலையிலும் தொடர் வளர்ச்சி கண்டு வருகிறது. உலக அளவில் இந்தியா இதில் 14வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 550 கப்பல்கள், 12 முக்கியத் துறைமுகங்கள், 187 சாதாரண துறைமுகங்கள், 7157 கி.மீ., கடற்கரைப் பரப்பு ஆகியவை உள்ளன. சீனாவுக்குப் பின்தங்கிய நிலையில் இந்தியா இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மொத்த வணிகக் கொள்ளளவில் 95 சதவீதத்தையும், மதிப்பில் 70 சதவீதத்தையும் இந்தியத் துறைமுகங்கள் நிர்ணயிக்கின்றன. கப்பல் தொடர்புடைய இத் துறையில் கடல் பகுதிக்கு உள்ளே, வெளியே என 2 பிரிவுகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. இயந்திரங்கள், உதிரி பாகங்கள், சரக்கு போன்ற பொருட்கள், கோதுமை, அரிசி, எரிபொருள், மூலப் பொருள் போன்றவற்றை ஒரு நாட்டி லிருந்து மற்றொரு நாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவையுள்ளது. இவற்றுக்கான தேவை அதிகரிக்கும் போது உலக வணிகம் மேம்படுவதோடு பெரிய கப்பல்களின் தேவையும் கூடுகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் புதிதாக 7 ஆயிரம் கப்பல்கள் கட்டப்பட்டு கடலில் இறங்கிடும் என கணிப்புகள் கூறுகின்றன. இந்த முயற்சியைக் கையாளும் திறனும் துறை முகங்களுக்கு அதிகப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ன. கப்பலுடன் கடலுக்குள் செல்லும் பிரிவில் பல்வேறு துறை சார்ந்த தொழில் நுட்பத்திறமைகள் தேவைப்படுகின்றன. கப்பலைக் கொண்டு செல்லுதல், கடல் சார்ந்த சட்ட திட்டங்கள், வெளிநாட்டு வணிகம் போன்ற மாறுபட்ட துறைகள் உள்ளன. ஒரு கப்பல் பிரச்னையின்றி செல்ல கப்பலில் உள்ள பலவேறு அதிகாரிகளுக்கு இடையே பணிப் பகிர்வும் செய்யப்படுகிறது. கப்பலின் மாலுமிகள், இன்ஜின் அறை பொறியாளர்கள், ஓட்டிச் செல்பவர்கள், ரேடியோ மற்றும் எலக்ட்ரிகல் டெக்னீசியன்கள், கப்பலுக்குத் தேவையான சப்ளைகள் மற்றும் துறைமுகம் தொடர்புடைய அம்சங்களில் பொறுப் பேற்கும் அதிகாரிகள் என பலரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களான டி.எஸ். சாணக்யா, டி.எஸ்.ரஹ்மின் போன்றவற்றில் பயின்று பொறியியல் அதிகாரிகளாகலாம். நாடிகல் சயின்சில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பவர் மற்றும் சிறப்பான வாய்ப்புகளை இத் துறையில் பெறலாம். ஆனால் மெர்க்கண்டைல் மரைன் துறை அல்லது டைரக்டர் ஜெனரல் ஆப் ஷிப்பிங் இவற்றின் சான்றிதழ் பெற்றால் மட்டுமே இப் படிப்புகளுக்கு மதிப்பு கிடைக்கிறது. இந்தப் பிரிவில் மாதம் 35 ஆயிரம் முதல் 8 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் உள்ளனர். காலத்திற்கு அப்பாற்பட்டு இத் துறையினருக்கு எப்போதும் தேவையும் வரவேற்பும் இருக்கிறது. கடலுக்கு வெளியே பணியாற்ற விரும்புவோருக்கு துறைமுக மேலாண்மை, கன்டெயினர் அண்ட் டெர்மினல் ஆப்பரேசன், டோவேஜ் அண்ட் பைலட்டேஜ், டிரட்ஜிங், ஐ.டி., சுற்றுச் சூழல் மற்றும் கப்பல் பாதுகாப்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பாதுகாப்பு போன்ற பணிகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. காமர்ஸ், நிதி, மார்க்கெட்டிங், சப்ளை செயின், டிரான்ஸ்போர்ட், போர்ட் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவுகளில் சிறப்புப் படிப்புகளை முடிப்பவருக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேலையின் தன்மைக்கேற்ப திறமைகளை வளர்த்து ஈடுபாட்டுடன் பணி புரிபவர்களுக்கு இத் துறையில் எப்போதும் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us