ஜன 26, 2010 12:00 AM
ஜன 26, 2010 12:00 AM
அ நிறம் | அளவு
விதிமுறைகள் என்ற பெயரில் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. குழந்தைகளின் இயற்கையான மனநிலையை அறிந்து அதற்கேட்ப பள்ளிகள் செயல்பட வேண்டும். உடல், சமூக, பொருளாதார அந்தஸ்தை பொறுத்து குழந்தைகளை வேறுபாட்டுடன் நடத்தக்கூடாது. பள்ளிகள் என்பவை அறிவை வளர்க்கும் நிறுவனங்கள்; தொழிற்சாலைகள் அல்ல. குழந்தைகள் "எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்' என்பதை பள்ளி ஆசிரியர்கள் உணர்ந்து, அதற்கேட்ப செயல்பட வேண்டும்'', என்று சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோசி தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை துன்புறுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., தனது 10 ஆயிரம் பள்ளிகளுக்கு இதனை தெரிவித்துள்ளது.
