தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/'பிசினஸ் அனலிஸ்ட்'

'பிசினஸ் அனலிஸ்ட்'

'பிசினஸ் அனலிஸ்ட்'


ஜூன் 26, 2026 11:00 AM

ஜூன் 26, 2026 11:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 26, 2026 11:00 AM ஜூன் 26, 2026 11:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைக் கண்டறிந்து, தரவுகள் மூலமாக தீர்வு காண்பது 'பிசினஸ் அனலிஸ்ட்'களின் பிரதான பணி.

உயர் அதிகாரிகளுடனும், தொழில்நுட்பக் குழுவினருடனும் இணைந்து பணியாற்றும் இவர்கள், நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து, உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டங்களை உருவாக்குகின்றனர்.

கல்வித்தகுதி:

மேல்நிலைக் கல்வியில், கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய பாடங்களை ஒரு விருப்பப் பாடமாக படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வணிக நிர்வாகம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் போன்ற இளநிலைப் பட்டப்படிப்புகளை படிக்கலாம். வணிக நிர்வாகம் அல்லது பிசினஸ் அனலிட்டிக்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் பெறுவது அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும்.

முக்கிய கல்வி நிறுவனங்கள்:
நாட்டின் சிறந்த அரசு கல்வி நிறுவனங்களான இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள்.

நுழைவுத்தேர்வுகள்:


கேட் (காமன் அட்மிஷன் டெஸ்ட்) - ஐ.ஐ.எம்., மற்றும் பிற முன்னணி அரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ., படிப்புகளில் சேருவதற்கான மிக முக்கியமான பொது நுழைவுத் தேர்வு.

சி.யு.இ.டி., யு.ஜி., / பி.ஜி., - இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் புகழ்பெற்ற அரசு கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு இந்தத் தேர்வை எழுதலாம்.

தேவைப்படும் திறன்கள்


தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறன், சிறந்த தகவல் தொடர்பு திறன், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம், கூர்மையான சிந்தனை மற்றும் கணினியில் எக்செல், எஸ்.க்யூ.எல்., போன்ற மென்பொருள்களில் ஆழ்ந்த அறிவு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us