தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புல் ஸ்டேக் டெவலப்பர்

புல் ஸ்டேக் டெவலப்பர்

புல் ஸ்டேக் டெவலப்பர்


ஜூன் 24, 2026 11:13 AM

ஜூன் 24, 2026 11:13 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 24, 2026 11:13 AM ஜூன் 24, 2026 11:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொழில்நுட்ப உலகில் பல்துறை திறன்களுடன் முன்னேற விரும்பும் மாணவர்களுக்கு, 'புல் ஸ்டேக் டெவலப்பர்' (Full Stack Developer) பணி சிறந்த தொழில் வாய்ப்பாக உருவெடுத்துள்ளது. சரியான பயிற்சி மற்றும் தொடர் திறன் மேம்பாட்டின் மூலம் இத்துறையில் நிலையான வளர்ச்சியையும், உயர்ந்த வருமானத்தையும் பெறலாம்.

ஒரு இணையதளம் அல்லது செயலியின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகிய இரண்டையும் வடிவமைத்து, உருவாக்கி, பராமரிக்கும் திறன் கொண்ட இவர், பயனர்கள் காணும் திரை வடிவமைப்பு முதல் தரவுத்தள மேலாண்மை வரை பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்.

ஏ.ஐ., தாக்கம் எப்படி?


செயற்கை நுண்ணறிவு கருவிகள் தற்போது வேகமாக 'கோடிங்' உருவாக்க உதவுகின்றன. இருப்பினும், முழுமையான மென்பொருள் வடிவமைப்பு, பாதுகாப்பு, தரவுத்தள மேலாண்மை மற்றும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை உருவாக்கும் பணிகளை மனிதர்களே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

'செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து செயல்படக்கூடிய புல் ஸ்டாக் டெவலப்பர்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்லூரி காலத்திலேயே புராஜெக்ட் மற்றும் இன்டர்ன்ஷிப் அனுபவங்களை பெறுவது நல்லது' என தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்றுக்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள்

* சி.எஸ்.எஸ்., ஜாவா ஸ்கிரிப்ட், ரியேக்ட், அங்குலர்
* நோடு.ஜேஎஸ், பைத்தான், ஜாவா அல்லது .நெட்
* மைஸ்குல், மொங்கோ டிபி, போன்ற தரவுத்தளங்கள்
* கிளவுட் தொழில்நுட்பங்கள்
* ஏ.ஐ., மற்றும் மிஷின் லேர்னிங் பயன்பாடு

பணி வாய்ப்புகள்

மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகள், இ-காமர்ஸ் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் புல் ஸ்டாக் டெவலப்பர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஊதியம்


தொடக்க நிலை புல் ஸ்டாக் டெவலப்பர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்து இந்த வருமானம் மேலும் உயர வாய்ப்புள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிலும் 'ரிமோட்' வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதால், திறமையான இளைஞர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us