தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இது 'பிரெயின் கெயின்' காலம்

இது 'பிரெயின் கெயின்' காலம்

இது 'பிரெயின் கெயின்' காலம்


ஜூன் 24, 2026 11:03 AM

ஜூன் 24, 2026 11:03 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 24, 2026 11:03 AM ஜூன் 24, 2026 11:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய யுகத்தில், 'செயற்கை நுண்ணறிவு' என்பது வெறும் பாடமாக அல்லாமல், கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாபெரும் கருவியாக உருவெடுத்துள்ளது.

இதனால், அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் ஏ.ஐ., பாடம் இணைக்கப்பட வேண்டும். இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் தங்களைச் சுற்றியுள்ள கிராம நிர்வாகம் அல்லது தொழிற்சாலை சார்ந்த இரண்டு நடைமுறை சவால்களை அடையாளம் கண்டு, அதற்கான நீண்டகால தீர்வுகளை ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்க வேண்டும்!

திறனே பலம்


'பள்ளி மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவரின் உண்மையான திறனை நிர்ணயிக்காது' என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறைந்த மதிப்பெண் பெற்ற கிராமப்புற மாணவர்கள் 'சர்வதேச ஹேக்கத்தான்கள்' மற்றும் உலகளாவிய திறன் போட்டிகளில் வென்று, ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

ஆடைகள் முதல் மருந்துகள் வரை அனைத்தும் தனிமனித தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடைந்துள்ள நிலையில், கல்வி முறை மட்டும் இன்னும் ஒரே அளவுகோலின் அடிப்படையில் மதிப்பிடப்படுவது சரியான அணுகுமுறை அல்ல!

எங்கள் கல்வி நிறுவனத்தில் மாணவர்களை ஒரே தொகுதியாக கருதாமல், ஒவ்வொருவரின் பின்னணி, திறன் மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப தனிப்பட்ட கற்றல் பாதைகளை வகுத்து வருகிறோம். 1,000க்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்கள் மாணவர்களின் திறன்களை, திட்டங்களை நேரடியாக கண்காணித்து வழிகாட்டுகின்றனர்.

'பிரெயின் கெயின்'


இந்திய திறமையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது கவலைக்குரிய விஷயம்தான். ஆனால், தற்போது நாட்டில் ஏ.ஐ., உட்கட்டமைப்பு மற்றும் 'ஸ்டார்ட்-அப்' சூழல் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதால், வெளிநாடுகளில் பணியாற்றியவர்கள் இந்தியா திரும்பி மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். இதனால், 'பிரெயின் டிரெயின்' நிலையிலிருந்து 'பிரெயின் கெயின்' நிலைக்கு சூழல் மாறி வருகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு பாடத் தேர்வு மற்றும் தொழில்முறை அனுபவம் பெறுவதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. மெக்கானிக்கல் பொறியியல் மாணவர் சட்டம் படிப்பதும், கணினி அறிவியல் மாணவர் இசை கற்பதும் இதனால் சாத்தியமாகியுள்ளது.

- எஸ்.வி.பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்தியமங்கலம், ஈரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us