/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
கவனம் ஈர்க்கும் 'ஸ்டெம்' கல்வி
/
கவனம் ஈர்க்கும் 'ஸ்டெம்' கல்வி
நவ 04, 2025 09:09 AM
நவ 04, 2025 09:09 AM

அதிக ஊதியம் தரும் வேலைகள், சிறந்த பாடத்திட்டங்களுக்காக 'STEM' கல்வி கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஒருங்கிணைந்த கற்றல்:
தனித்தனி பாடங்களாக இல்லாமல், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து செயல்படும் நான்கு பாடங்களின் கலவையாகும்.
நடைமுறை அனுபவம்:
தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் அறிவியலைக் கற்றுக்கொள்வதை இது உறுதிசெய்கிறது.
திறன் வளர்ச்சி:
மாணவர்களின் திறமைகளை வளர்த்து, நிஜ உலக பிரச்சனைகளைச் சமாளிக்கத் தேவையான திறன்களை வழங்குகிறது.
ஆர்வமும் ஊக்குவிப்பும்:
தமிழக இளைஞர்கள் 'ஸ்டெம்' பாடங்களுக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
வெற்றிகர அடித்தளம்
நன்கு கட்டமைக்கப்பட்ட 'ஸ்டெம்' பாடத்திட்டம் வெற்றிகரமான செயல்படுத்தலுக்கான அடித்தளமாகும். இளைஞர்கள் படித்திருப்பினும் வேலைக்குத் தேவையான திறன்கள் இல்லை என பொறியியல் தொழில் நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன. நாம் பின்பற்றும் கல்வி பெரும்பாலும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் இவற்றை உள்ளடக்கிய 'ஸ்டெம்' கல்விமுறை நேரடி செயல்பாட்டு கற்றல், விமர்சனபூர்வ சிந்தனை வழி கற்றல், சிக்கல்களைத் தீர்க்கும் முறைகளை ஆய்வு செய்து கற்றல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
தீர்வு தரும் கல்வி
'ஸ்டெம்' கல்வித் திட்டத்தின்கீழ் பாடங்கள் தனித்தனியே நடத்தப்படுவதில்லை. கேள்வி/பதில் என்பதைத் தவிர்த்து பிரச்னை/தீர்வு கண்டுபிடிப்பு என்பதாகக் கல்வியை அது அணுகுகிறது. பாடப்புத்தகத்தில் படிப்பது என்பதைக் கடந்து ஆய்வு உபகரணங்கள், தொழில்நுட்ப கருவிகள் மென்பொருள் செயல்திட்ட மாதிரிகள் என அறிவை விரிவடைய செய்யும் முறையாக அது உள்ளது.
நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்று பொதுக்கல்வி போதிக்கிறது. 'ஸ்டெம்' கல்வியில் மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரு பாராசூட்டைச் செய்து புவியீர்ப்பு விசையும் காற்றின் எதிர்ப்புச் சக்தியும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நேரடியாகச் செய்து பார்க்கிறார்கள். கல்வியின் அடிப்படை குறித்து விவாதம் நடந்துவரும் இன்றையச் சூழலில் 'ஸ்டெம்' கல்வி குறித்தும் பேச வேண்டியது அவசியம்.
மாணவர்கள் புதிய கருத்துக்களைக் கண்டறியவும், புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் 'ஸ்டெம்' கல்வித்திட்டம் துாண்டுகிறது.
வேகமாக மாறிவரும் உலகில், இந்தத் துறைகளில் தேவையான திறன்களை மாணவர்களுக்கு வழங்கி எதிர்கால வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துகிறது.
மாணவர்கள் குழுக்களாக இணைந்து திட்டங்களைச் செய்து, அவற்றின் மூலம் கற்றலை மேம்படுத்தலாம்.
தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் அனுபவத்தின் மூலம் அறிவியலைக் கற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது.
இந்தக் கல்வி முறை குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கி, இளைய மற்றும் மூத்த பள்ளிகள் வரை உள்ள மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலரும் இந்தத் துறைகளில் முன்னேற ஸ்டெம் கல்வி உதவுகிறது.

