/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அமைதியை வலியுறுத்தும் பல்கலைக்கழகம்
/
அமைதியை வலியுறுத்தும் பல்கலைக்கழகம்
மே 16, 2025 12:00 AM
மே 16, 2025 12:00 AM

போட்டிகள் நிறைந்த இன்றைய உலக தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர்; அவரவர் தகுதிக்கு ஏற்ப அச்சத்தின் அளவு வேறுபடுகிறதே தவிர, உணர்வு ஒன்றே, அச்சம் இல்லாதவர் என்பவர் வெகு சிலரே!
அச்ச உணர்வு களைந்து, அனைவரும் அமைதிடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ, அனைவரும் வாழ்வின் அர்த்தத்தை உணர்தல் மிக அவசியம். தொழில்நுட்ப அறிவியல் அறிவும், ஆன்மிக சிந்தனையும் இணைந்தால் உலகில் அமைதி நிலவும். பண்டைய ஞானமும், நவீன அறிவும் இணைவதே நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.
ஆகவேதான், விவேகானந்தரின் வாழ்வியல் நெறிமுறைகளின்படி, எங்கள் பல்கலைக்கழகத்தில் அறிவியல், நெறிமுறை, ஆன்மீகம் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன. மத நல்லிணக்கம் மற்றும் உலக அமைதிக்கு பங்களிக்க வேண்டிய தேவைகள் மாணவர்களுக்கு உணர்த்தப்படுகின்றன. தனித்துவமான உலக சமாதான பாடத்திட்டத்தின் வாயிலாக, தொழில்நுட்ப திறமைகளோடு, ஒழுக்கம் மற்றும் மனிதநேயம் ஊக்குவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாணவரும் அவரவரை உணர்ந்த வாழ்வை வாழும் வகையில், அனைத்து மாணவர்களுக்கும் முதலாமாண்டில் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை மாற்றத்திற்கான தன்னை உணரும் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அனைத்து பதவிகளையும் பொறுப்புள்ள, தகுதியுள்ளவர்கள் பெற வழிவகுக்கும் வகையிலும், அர்ப்பணிப்புள்ள அரசியல் தலைவர்களை உருவாக்கும் குறிக்கோளுடனும் 'பாரதிய சத்ரா சன்சத்' மாநாடு நடத்தப்படுகிறது.
ஆசியாவில் முதன்முதலாக அரசியல் தலைமைத்துவம் மற்றும் ஆட்சி பற்றிய முழுமையான படிப்பு வழங்கப்படுகிறது. இந்திய மாணவர் பாராளுமன்றம், தேசிய ஆசிரியர் மாநாடு மற்றும் தேசிய மகளிர் பாராளுமன்றம் போன்ற பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது.
கல்வி, ஆராய்ச்சி, அறிவியல் வளர்ச்சியில் சாதனையாளர்களாக மட்டும் அல்லாமல், மன அமைதி மற்றும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் மாணவர்கள் உருவாக வேண்டும். அத்தகைய கல்வி முறை இன்றைய மாணவர்களுக்கு அவசியமாகிறது. அதுவே முழுமையான கல்வியும் கூட...
-டாக்டர் ராகுல் வி.காரத், நிர்வாக அறங்காவலர், எம்.ஐ.டி., - உலக அமைதி பல்கலைக்கழகம், புனே.