sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நெருங்கும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - வெல்வது எப்படி?

/

நெருங்கும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - வெல்வது எப்படி?

நெருங்கும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - வெல்வது எப்படி?

நெருங்கும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - வெல்வது எப்படி?


மார் 07, 2014 12:00 AM

மார் 07, 2014 12:00 AM

Google News

மார் 07, 2014 12:00 AM மார் 07, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைவது ஒருவரின் முன்தயாரிப்பு வியூகம், சுய முயற்சி, நேர மேலாண்மை மற்றும் கடின உழைப்பில் நம்பிக்கை ஆகிய அம்சங்களைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தாண்டு, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(AIPMT - 2014) கேள்வித்தாள் எளிமையாக இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால், கடந்தாண்டு NEET - 2013 தேர்வின் கேள்வித்தாளை விட, இந்தாண்டு AIPMT தேர்வு கேள்வித்தாள் எளிமையாக இருக்கும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கோச்சிங் முக்கியமா?

AIPMT தேர்வை வெல்ல கோச்சிங் வகுப்புகளுக்கு அவசியம் செல்ல வேண்டுமா? என்பதைக் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு மாணவர் கோச்சிங் எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா, இல்லையா? என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்து அமைகிறது. சில திறன்வாய்ந்த மாணவர்கள் தங்களுக்கு கோச்சிங் வகுப்புகள் தேவையில்லை என்று நினைக்கின்றனர்.

இயல்பிலேயே நல்ல திறனுள்ள மாணவர்கள், கோச்சிங் வகுப்புகளுக்கு செல்வதன் மூலம் இன்னும் மேம்பாடு அடைகிறார்கள். இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு போட்டி மிகவும் அதிகம் என்பதால், ஒரு மாணவரின் முயற்சியை கட்டமைக்கப்பட்ட வகையில் வழிநடத்தி, வெற்றியை உறுதி செய்வது முக்கியமான விஷயம். ஒரு நல்ல கோச்சிங் வகுப்பு அதைத்தான் செய்கிறது.

முன்தயாரிப்பு வியூகம்

என்னதான் தயாரிப்பு வியூகங்கள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், கடின உழைப்பே மிகவும் முக்கியமானது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் கிடையாது. AIPMT -ன் பாடத்திட்டம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், டெஸ்ட் பேப்பர்கள் மற்றும் அசைன்மென்ட்டுகளை திருப்பிப் பார்ப்பதோடு, பேப்பர்களிலும் பயிற்சி செய்ய வேண்டும். 11வது மற்றும் 12வது கோர்ஸ்களுக்கு வியூக ரீதியில் தயாராவதோடு, சிறப்பான நேர மேலாண்மையையும் கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் நமக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.

ஒருவர் கோச்சிங் வகுப்புக்கு செல்கிறாரோ, இல்லையோ, சரியான திட்டமிடலுடன் கூடிய படிப்பு மிகவும் முக்கியம். முன்தயாரிப்பு செயல்பாடுகள் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடாது. கோச்சிங் வகுப்புகளுக்கு செலவழிக்கும் நிலையில் இல்லாதவர்கள், ஏதேனும் பெயர்பெற்ற கல்வி நிறுவனத்தின் sheets மற்றும் நோட்ஸ்களை பெற்று, அவற்றை பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும்.

தொலைநிலைக் கல்வியை வழங்கும் பல கல்வி நிறுவனங்கள், முழுமையான படிப்பு உபகரணங்கள், வீட்டில் அல்லது மையத்தில் பயிற்சி செய்வதற்கான டெஸ்ட் பேப்பர்கள் மற்றும் Rankers Package collection ஆகியவற்றை அளிக்கின்றன.

படிப்பு உபகரணம்

இத்தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு NCERT புத்தகங்கள் சிறந்தவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், இவை தவிர்த்து, பல பெயர்பெற்ற கல்வியாளர்கள் எழுதிய புத்தகங்களையும் பயன்படுத்துவது அவசியம்.

எப்போதும் NCERT புத்தகங்களைப் பயன்படுத்துதல், வகுப்பறை நோட்ஸ், கோச்சிங் மையங்கள் அல்லது புகழ்பெற்ற வெளியீட்டாளர்களின் sheets அல்லது படிப்பு உபகரணம் போன்றவை, இத்தேர்வில் வெல்ல பெரிதும் கைகொடுப்பவை.

தங்களின் சொந்த முயற்சிகளின் மூலமாகவோ அல்லது புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் அளிக்கும் தொலைதூர கல்வித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலமாகவோ மேற்கண்ட உபகரணங்களைப் பெறலாம். இவைதவிர, ஆன்லைன் உபகரணம் மற்றும் test series போன்றவையும், ஏற்கக்கூடிய விலையில் மாணவர்களுக்கு கிடைக்கின்றன.

ஒருவர் எவ்வளவு நாட்கள் படிக்க வேண்டும்?

படிக்கும் நேரம் என்பது மாணவருக்கு மாணவர் வேறுபடும். சராசரியாக 10 முதல் 12 மணிநேரங்கள் நன்கு கவனமாக படிப்பது அவசியமாகிறது. ஏனெனில், தேர்வில் சற்று விரிவான முறையில் கேள்விகள் வருவதால்.

அதிக வெயிட்டேஜ் உள்ள அம்சங்களுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில், அதிகளவிலான கேள்விகள் அப்பகுதிகளிலிருந்து கேட்கப்படுகின்றன.

சில முக்கிய ஆலோசனைகள்

* தெளிவான நோக்கத்துடன் முழு பாடத்திட்டத்தையும் திருப்பி பார்க்கவும். முழு தியரியையும் திரும்ப திரும்ப படிக்க வேண்டாம்.

* முடிந்தளவு அதிக கேள்விகளுக்கு விடையெழுதிப் பாருங்கள். நீங்கள் தவறாக பதிலளித்த விஷயங்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க முயலவும்.

* இது வேகம் மற்றும் நுட்பம் ஆகியவை இணைந்த திறனுக்கான ஒரு போட்டி. எனவே, எந்தளவு அதிக பயிற்சி செய்கிறோமோ, அந்தளவு வெற்றியும் நிச்சயம்.

* நவீன இயற்பியல் தொடர்பான தியரி கேள்விகள் மிகவும் எளிதானவை மற்றும் குறைந்தளவு கால்குலேஷன்கள் கொண்டவை. எனவே, பயாலஜி படித்த மாணவர்கள் அவற்றில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

* Heat மற்றும் Thermodynamics பிரிவில், அதிகளவிலான கேள்விகள் P-Y அல்லது தெர்மோடைனமிக் கொள்கைகள் தொடர்பானவை. இவற்றின் சிக்கல் தீர்ப்பது எளிது.

* எந்த தலைப்பை எடுத்துக் கொண்டாலும், முதலில், நேரடி பார்முலா அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

* வேதியியலைப் பொறுத்தவரை, உப தலைப்பு அடிப்படையிலான கேள்வி, கிராப் அடிப்படையிலான கேள்வி மற்றும் பொருத்துக தொடர்பான கேள்விகள் இடம்பெறலாம்.

* உயிரியலை எடுத்துக்கொண்டால், NCERT புத்தகங்களில் வழங்கப்பட்டுள்ள டயகிராம்கள், சார்ட்டுகள் மற்றும் அட்டவணைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

* விரைவான திருப்புதலுக்காக, பிசியாலஜி மெக்கானிசத்திற்கான ஒரு வரிசைகிரம(flow chart) பட்டியலைத் தயார்செய்ய வேண்டும்.

* ஏதாவது ஒரு கேள்வி நீளமான கால்குலேஷன் அடிப்படையில் கேட்கப்பட்டால், ஆப்ஷன்கள் அடிப்படையில் அல்லது தோராய அடிப்படையில் அதை சிக்கல் தீர்ப்பதற்கு முயலவும்.

தேர்வின்போது நமது மனநிலை எப்படி இருக்கக்கூடாது?

படபடப்பாக இருக்க வேண்டாம்.
குறுக்கு வழியை மறந்துவிடவும்.
எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்
பதற்றம் வேண்டாம்.
நேரத்தை வீணாக்க வேண்டாம்.
கட்டுப்பாடற்று இருக்க வேண்டாம்.
பாதியிலேயே எதையும் கைவிட வேண்டாம்.
போன் அழைப்புகளை தவிர்க்கவும்.
எதிர்மறையாக சிந்திக்க வேண்டாம்.
கவனச் சிதறல் இருக்கக்கூடாது.






      Dinamalar
      Follow us