/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
கேஸ் ஸ்டடீஸை சமாளிப்பது எப்படி?
/
கேஸ் ஸ்டடீஸை சமாளிப்பது எப்படி?
மார் 07, 2014 12:00 AM
மார் 07, 2014 12:00 AM
கேஸ் ஸ்டடீஸ் பற்றி புரிந்துகொள்வதற்கென்று எந்த தனி நுட்பங்களும் இல்லை. அவை பொதுவாக ஒரு நடைமுறை உதாரணங்கள் ஆகும். ஒரு நிறுவனத்திற்கு என்ன ஆனது மற்றும் அதற்கான சூழலுக்கு இட்டுச் சென்றது எது? என்பதைப் பற்றிய உதாரணங்கள்தான்.
நீங்கள் ஒரு கேஸை படிக்கும்போது, அதை, கதை மாதிரியே படிக்கவும். அது உங்களுக்குள் இறங்க வேண்டும். நேரடியாக கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. நிர்வாக முடிவுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் ஆகிய எல்லைகளைத் தாண்டி, இதர சமூக மற்றும் அரசியல் தாக்கங்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.
ஒரு கேஸ் எப்போது எழுதப்பட்டது மற்றும் அதன் சூழல் போன்றவை ஆராயப்பட வேண்டும். எனவே, ஒவ்வொரு சூழலிலும் என்ன நடக்கிறது என்பதை ஒருவர் ஆராய்ந்து, அதன்படி விஷயங்களை இணைத்து, பதிலைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.
நமது பாடத்தில் தியரி மற்றும் பிராக்டிகல் பிரிவுகளில் நல்ல அறிவைப் பெற்றிருந்தால் போதும், கேஸ் ஸ்டடியை எளிதாக முடித்து அதிக மதிப்பெண் பெற்றுவிடலாம் என்று சில மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கேஸ் ஸ்டடி விஷயத்தில் நடைமுறை வாழ்வின் உதாரணங்கள் மற்றும் நடைமுறை அனுபவம் ஆகியவை முக்கியம்.
கார்பரேட் உலகிலுள்ள சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை கேஸ் ஸ்டடி நடவடிக்கைகள் கற்றுத் தருகின்றன. ஒரு கேஸ் தொடர்பாக தீர்வுகாண வேண்டுமெனில், உங்களின் செயல்பாடு சரியானதாக இருக்க வேண்டும். ஏனெனில், கேஸ் தொடர்பான சூழல்களை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளா விடில், உங்களால் தெளிவான பதிலை கண்டறிய முடியாது.
கிடைக்கக்கூடிய தரவுகள் மற்றும் தகவல்களின் மூலமாக சிக்கலைத் தீர்க்க வேண்டும். கேஸ் ஸ்டடி என்பது, ஒரு சிக்கலை அணுகுதல் தொடர்பானதாகும். தீர்ப்பது தொடர்பானதல்ல.
ஒரு நல்ல மேலாளராக இருக்கும் வகையில் எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது?
ஒரு நல்ல மேலாளருக்கு தெளிவான நோக்கம் இருப்பது அவசியம். நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், நம் பொறுப்பிலுள்ள வளங்களை சிறப்பான மேலாண்மை செய்ய நம்மால் முடியும்.
அதிகமாக படித்தல் என்பது தேவைப்படும் முக்கியப் பண்புகளில் ஒன்று. அதன்மூலம்தான் உங்களிடம் அதிக விஷயங்கள் இருக்கும். அப்போதுதான் நீங்கள் பேசும்போது உங்களின்பால் பலரையும் கவர முடியும்.
மேலும், கவனித்தல் என்பதும் மிக மிக முக்கியமாக தேவைப்படும் ஒரு பண்பாகும். நீங்கள் கவனிப்பதன் மூலமே, ஒருவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து, அதன்மூலம் உங்கள் கருத்தை தெளிவாக புரியவைத்து, தகவல்தொடர்பை வெற்றியானதாக ஆக்க முடியும்.
விஷயங்களை, துல்லியமாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்துவது இன்னொரு முக்கிய தகுதியாகும். மேலும், உங்கள் நிறுவனத்தில் நடக்கும் நிகழ்வுகளில், உற்சாகமாகப் பங்கெடுக்க வேண்டும். ஏனெனில், நிறுவனத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் உற்சாகமாகவும், துடிப்புடனும் பங்கேற்பதன் மூலம், ஒரு மேலாளர் என்ற வகையில் நிறைய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

