தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/செயற்கை நுண்ணறிவு: வேர் முதல் கிளை வரையிலான மாற்றம்

செயற்கை நுண்ணறிவு: வேர் முதல் கிளை வரையிலான மாற்றம்

செயற்கை நுண்ணறிவு: வேர் முதல் கிளை வரையிலான மாற்றம்


பிப் 26, 2026 04:51 PM

பிப் 26, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

பிப் 26, 2026 04:51 PM பிப் 26, 2026 04:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 40 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பல பரிணாமங்களைக் கண்டிருக்கிறேன். இருந்தாலும், தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) ஏற்படுத்திவரும் மாற்றம், முந்தைய அனைத்தையும் விட அதிவேகமானதகாவும், ஆழமானதாகவும் இருக்கிறது.

இது வெறும் மேலோட்டமான மாற்றம் அல்ல, அதைப் பயன்படுத்தும் நிறுவனங்களை முழுமையாக மாற்றியமைக்கும் ஓர் அடிப்படைப் புரட்சி இது.

புதிய திறன்களும் சவால்களும்

முன்கூட்டியே அமைக்கப்பட்ட மென்பொருள் உள்கட்டமைப்புகளால் ஏ.ஐ., மிக வேகமாகப் பரவி வருகிறது. இனிமேல் நாம் நிரலாக்கத்தை மட்டும் செய்வதை விட, ஏ.ஐ.,யை ஒருங்கிணைத்து வழிநடத்தும் திறமைக்குத் தான் மதிப்பு கிடைக்கும்.

மேலும், இது வரை மென் பொருள் தொழில்நுட்பங்கள் உறுதியான முடிவுகளை கொடுத்தது. அதற்கு மாறாக, கணிக்க முடியாத முடிவுகளைத் தரக்கூடிய ஏ.ஐ.,யிடமிருந்து, நம்பகமான தீர்வுகளைப் பெறுவதே நிறுவனங்களுக்கு தற்போதைய மிகப்பெரிய சவாலாகும்.

தொழில்நுட்பக் கடன்


இதனால், கடந்த 40 ஆண்டுகளாக வாங்கிக் குவித்துள்ள பழைய மென்பொருள் அமைப்புகள் ஒரு பெரும் 'தொழில்நுட்பக் கடனாக' மாறியுள்ளன. இந்த அமைப்புகளை நவீனப்படுத்த ஏ.ஐ., ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.

இனி நிறுவனங்கள் சிக்கலான மென்பொருள்களை வெளியில் வாங்க வேண்டிதில்லை. தாங்களே உருவாக்கத் துவங்குவர். ஏனெனில், 'ஏ.ஐ., ஏஜெண்டுகள்' அனைத்து மென்பொருள் பயன்பாடுகளுக்கும் முக்கிய இடைமுகமாகச் செயல்படும்.

செயல் இடைவெளி


ஏ.ஐ., மாடல்களின் தரவுப் பகுப்பாய்வுத் திறன் அசுர வேகத்தில் வளர்ந்தாலும், நிறுவனங்களால் அதை உடனடியாகச் செயல்படுத்த முடிவதில்லை. இது ஏ.ஐ.,யின் குறைபாடு அல்ல. தரவுகளைச் சீரமைப்பது மற்றும் மனிதர்களுக்கு ஏ.ஐ.,யை பயன்படுத்த பயிற்சி அளிப்பதில் ஏற்படும் 'செயலாக்க இடைவெளி' காரணம்.

மாறாத அடிப்படைத் திறன்கள்

எத்தகைய தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அந்தத் தொழில்நுட்பக் கருவியின் உதவியின்றிப் பிரச்னைகளை ஆராயும் 'அடிப்படைச் சிந்தனை' மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் தனித்துவமான 'சூழலைப் புரிந்துகொள்ளும் திறன்' ஆகியவை எப்போதும் தேவைப்படும் திறன்களாகவே இருக்கும். நாம் அதில் தான் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வாய்ப்புகளும் சவால்களும்

இப்போது ஏ.ஐ.,யை புரிந்துகொள்வதா, புறந்தள்ளுவதா என்ற தொழில்நுட்பப் போர் மூண்டிருப்பது போல சிலர் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் நடப்பது பணி கலாசாரத்தை மாற்றியமைக்கும் ஒரு மேலாண்மைப் போர். அதே போல, ஏ.ஐ., வந்து வாய்ப்புகளை காலி செய்துவிடவில்லை.

இப்போது ஏற்பட்டிருப்பது 'வாய்ப்புப் பஞ்சம்' அல்ல. ஏ.ஐ.,யை எவ்வளவு விரைவாக புரிந்துகொண்டு, நிறுவனமெங்கும் செயல்படுத்த முடியும் என்ற 'செயலாக்க இடர்' தான் இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஏ.ஐ., யுகத்தில் அதை யார் வேகமாக, முழுமையாக, பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும்.
- நந்தன் நிலேகனி, சேர்மன், இன்போசிஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us