தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/'சோஷியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட்'

'சோஷியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட்'

'சோஷியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட்'


பிப் 25, 2026 11:25 AM

பிப் 25, 2026 11:25 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 25, 2026 11:25 AM பிப் 25, 2026 11:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகளாவிய டிஜிட்டல் வளர்ச்சியால், வணிக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி சிறு, குறு தொழில் அமைப்புகளுக்கும், அவர்களது நுகர்வோருக்கும் இடையேயான சிறந்த பாலமாக, சமூக வலைதளங்கள் விளங்குகின்றன. இத்தகைய சுழலில், 'சோஷியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட்' எனப்படும் சமூக ஊடக நிபுணர்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.

ஒரு நிறுவனத்தின் 'பிராண்ட்' மதிப்பை சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன் மற்றும் எக்ஸ் போன்றவற்றின் மூலம் மேம்படுத்துபவரே 'சோஷியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட்'. இவர் ஆக்கப்பூர்வமான பதிவுகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுடன் உரையாடுவது மற்றும் தரவுகளை ஆய்வு செய்து நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதி செய்வது போன்ற பணிகளையும் செய்கிறார்.

கல்வித் தகுதி

இந்தத் துறைக்கு எனத் தனியாகப் பட்டப்படிப்பு அவசியமில்லை என்றாலும், மார்க்கெட்டிங், தொடர்பியல் அல்லது இதழியல் சார்ந்த படிப்புகள் கூடுதல் பலம் சேர்க்கும். இவை பிராண்டிங் மற்றும் விளம்பரம் குறித்த அடிப்படைகளைப் புரிந்து கொள்ள உதவும்.

ஆரம்ப காலங்களில், சிறு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகிப்பதன் வாயிலாக அனுபவம் பெறலாம். சொந்த சமூக வலைதளப் பக்கங்களை ஒரு புரொபஷனல் முறையில் வளர்த்துக்காட்டுவதும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும்.

ஐ.ஐ.டி., மற்றும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், கூகுள் போன்ற ஆன்லைன் தளங்கள், சமூக ஊடக மேலாண்மை குறித்த குறுகியகால சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன.

தேவையான திறன்கள்

ஒரு 'சோஷியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட்' ஆக உருவெடுக்க ஆக்கப்பூர்வமான சிந்தனை என்பது மிகவும் அவசியமான ஒன்று. இது மக்களைக் கவரும் வகையில் புதிய ஐடியாக்களை உருவாக்கி பிராண்டை தனித்து காட்ட உதவுகிறது. அதே போல், பதிவுகளின் ஈடுபாட்டை முறையாக ஆய்வு செய்து, தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத் திட்டங்களை வகுக்க பகுப்பாய்வுத் திறன் துணையாக நிற்கிறது. கிராபிக் டிசைனிங் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்ற அடிப்படை தொழில்நுட்ப அறிவும், தரமான 'கன்டென்ட்'களை விரைவாக உருவாக்க கூடுதல் பலமாக அமைகிறது.

எஸ்.இ.ஓ., (SEO) பற்றித் தெரிந்திருப்பது அவசியம். பதிவுகள் அதிகமான மக்களைச் சென்றடைய இது மிகவும் உதவும். மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் அவற்றின் அல்காரிதம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். புதிய டிரெண்டுகள் மற்றும் புதிய பிளாட்பார்ம்களைத் தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதும் அவசியம்.

சமூக வலைதளங்களில் ஆர்வமுள்ளவராகவும், அதே சமயம் புதுமையான சிந்தனை கொண்டவராகவும் இருத்தல், 'சோஷியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட்' ஆக பிரகாசிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us