sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

தொழில்முனைவோராக பரிணமியுங்கள்!

/

தொழில்முனைவோராக பரிணமியுங்கள்!

தொழில்முனைவோராக பரிணமியுங்கள்!

தொழில்முனைவோராக பரிணமியுங்கள்!


மே 26, 2024 12:00 AM

மே 26, 2024 12:00 AM

Google News

மே 26, 2024 12:00 AM மே 26, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் நாட்டில் உயர்கல்வித் துறை முன்னேறி உள்ளதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தான் மிக முக்கிய காரணம். புத்தாக்க கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், தொழில் நிறுவனங்களுடனான நல்லுறவு மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை அரசுகளால் ஊக்குவிக்கப்படுகின்றன.

இத்தகைய ஆதரவால் தான், நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை மேம்படுத்த முடிவதோடு, மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை கல்வி நிறுவனங்களால் ஏற்படுத்தித்தர இயலுகிறது. பிஎச்.டி., படித்த பேராசிரியர்களால் மட்டுமின்றி, தொழில் நிறுவன அனுபவம் பெற்றவர்களாலும் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஊக்கமளிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களுக்கும் உரிய தர அங்கீகாரம் மற்றும் ரேங்கிங் வழங்கப்படுவதும், மாணவர்களின் பிரதான எதிர்பார்ப்பு பாடப்பிரிவைவிட, சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதாக மாற்றம் கண்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

அனைத்துத் துறை வளர்ச்சி


கடந்த 20 ஆண்டுகளாக, ஐ.டி., துறையின் வளர்ச்சி மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. இன்று, பல்வேறு துறைகளும் ஐ.டி., துறைக்கு இணையாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஐ.டி., மட்டுமின்றி, பார்மசி, பயோடெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், சிவில் என பல்வேறு துறைகளும் வளர்ந்து வருகின்றன. நீண்ட காலத்தை ஒப்பிட்டோமேயானால், இன்று ஐ.டி., துறையில் மட்டுமின்றி பிற துறைகளிலும் அதிக ஊதியம் வழங்கப்படுகின்றன. இத்தகைய அம்சங்களை உணர்ந்து மாணவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்து, ஆர்வமாகவும், ஆழமாகவும் படித்தால், பிரகாசமான வாய்ப்புகள் நிச்சியம் கிடைக்கும்.

கண்டுபிடிப்புகளில் ஈடுபடுங்கள்


இன்று கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகள் கழித்தே வேலை வாய்ப்பை எதிர்நோக்க உள்ளனர். ஆகவே, எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, வாழ்வின் அடுத்த 30 ஆண்டுகளுக்குமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்கள் செயல்பட வேண்டும்; புதுப்புது திட்டங்கள், ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். கண்டுபிடிப்புகளில் அதிகளவு ஈடுபட வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே எதிர்கால வாய்ப்புகள் அமையும் என்பதையும் மாணவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

அனைத்து மாணவர்களையும், தொழில் நிபுணர்களிடம் நல்லுறவை மேம்படுத்தும் வாய்ப்பை கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்தித்தர வேண்டும். பெரும்பாலான தமிழக மாணவர்களின் எதிர்பார்ப்பு சிறந்த வேலை வாய்ப்பை பெறுவதாக மட்டுமே உள்ளது. பரந்து, விரிந்துள்ள உலக வாய்ப்புகளை மாணவர்கள் புரிந்துகொண்டு, வேலை வாய்ப்பை மட்டுமே எதிர்பார்க்காமல் தொழில்முனைவோராகவும் பரிணமிக்க முயற்சி செய்ய வேண்டும்.

இன்று வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இந்தியாவில் படித்து பட்டம் பெற்றவர்களே உள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இந்திய கல்வி தரம் உரிய அங்கீகாரத்தை பெறுவதோடு, சர்வதேச அளவில் சிறந்த இடத்தை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.

-அபய் சங்கர், துணைத் தலைவர், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள், சென்னை.






      Dinamalar
      Follow us