/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பிரிட்டிஷ் கவுன்சில் உதவித்தொகை
/
பிரிட்டிஷ் கவுன்சில் உதவித்தொகை
ஏப் 18, 2024 12:00 AM
ஏப் 18, 2024 12:00 AM
ஸ்டெம் எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டப்படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பிரத்யேக உதவித்தொகையை வழங்குகிறது.
முக்கியத்துவம்
ஐக்கிய நாடுகளின் அறிவியல் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஸ்டெம் துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. சர்வதேச அளவில், இந்த துறைகளில் உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் மட்டுமே.
குறிப்பாக, இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி துறையில் 3 சதவீத மாணவிகளும், நேச்சுரல் சயின்ஸ், கணிதம், புள்ளியியல் ஆகிய துறைகளில் 5 சதவீத மாணவிகளும், பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளில் 8 சதவீத மாணவிகளும் சேர்க்கை பெறுகின்றனர். ஆகவே, ஸ்டெம் துறைகளில் பெண்களிடம் ஆர்வத்தை தூண்டும் வகையில் பிரிட்டிஷ் கவுன்சில் இந்த உதவித்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.
தகுதிகள்
* ஸ்டெம் துறைகளில், செப்டம்பர் / அக்டோபர் 2024 - 2025 கல்வியாண்டில் பிரிட்டனில் உயர்கல்வி படிப்பை மேற்கொள்ள தகுதி உள்ளவர்கள், நான்காவது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
* யு.கே., பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் ஆங்கில மொழி புலமையை பெற்றிருக்க வேண்டும்
* பணி அனுபவம் அல்லது துறையில் உரிய ஆர்வம் இருத்தல் வேண்டும்
* நிதி உதவி தேவையை நிரூபித்தல் அவசியம்
உதவித்தொகை விபரம்:
முழுகல்விக் கட்டணம், ஊக்கத்தொகை, பயணச் செலவுகள், விசா கட்டணம் மற்றும் காப்பீடு ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.
பங்குபெறும் பல்கலைக்கழகங்கள்:
குயின்மேரி யுனிவர்சிட்டி ஆப் லண்டன், ஆங்கில ரஸ்கின் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆப் கிரீன்விச், யுனிவர்சிட்டி ஆப் சவுத்தம்டன், கொவென்ட்ரி யுனிவர்சிட்டி.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வாயிலாக பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
இணையதளம்:
www.britishcouncil.in/study-uk/scholarships/womeninstem-scholarships
இமெயில்:
WomenInStem.Scholarships@britishcouncil.org