/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
'ஸ்போர்ட்ஸ் கோச்சிங்' படிப்பு
/
'ஸ்போர்ட்ஸ் கோச்சிங்' படிப்பு
ஏப் 26, 2024 12:00 AM
ஏப் 26, 2024 12:00 AM

வாழ்வில் விளையாட்டுப் பயிற்சியாளராக பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு தேவையான அறிவு மற்றும் மேம்பட்ட திறன்களை வழங்கும் பிரதான கல்வி நிறுவனம் என்.எஸ்.என்.ஐ.எஸ்.,
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ்,1961ம் ஆண்டு பட்டியாலாவில் துவங்கப்பட்ட என்.எஸ்.என்.ஐ.எஸ்., எனும் 'நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்' கல்வி நிறுவனம், விளையாட்டு பயிற்சிக்கான பிரத்யேக படிப்புகளை வழங்குகிறது.
கல்வி வளாகங்கள்:
பட்டியாலா, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம்
வழங்கப்படும் படிப்புகள்:
* டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங்
* எம்.எஸ்சி., இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங்
* ஸ்கில் டெவலப்மெண்ட் கோர்ஸ்
* பி.ஜி., டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் மெடிசன்
* பி.ஜி., டிப்ளமா இன் எக்சர்சைஸ் பிசியாலஜி
* பி.ஜி., டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன்
* பி.ஜி., டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் பர்பாமன்ஸ் அனலைசிஸ்
* பி.ஜி., டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி
* பி.ஜி., டிப்ளமா இன் ஸ்டெரென்த் அண்டு கன்டிஷனிங்
* ஸ்போர்ட்ஸ் கோச்சிங் - ஆறு வாரகால சான்றிதழ் படிப்பு
'ஸ்போர்ட்ஸ் கோச்சிங்'
பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு திறமையான பயிற்சியாளர்களை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படும் இக்கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் பிரதான படிப்புகளில் ஒன்று, 'ஸ்போர்ட்ஸ் கோச்சிங்'. மாணவர்களை சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளராக பரிணமிக்கும் வகையில் தயார்படுத்துவதே இப்படிப்பின் முதன்மை இலக்கு. அடிப்படை பயிற்சி நுட்பங்களுக்கு அப்பாற்பட்டு, மேம்பட்ட பயிற்சி திறன்களை பெற ஊக்குவிக்கிறது.
கபடி, பாட்மிண்டன், புட் பால், பேஸ்கட் பால், பாக்ஸிங், ஹாக்கி, ஹாண்ட் பால், ஜூடோ, வாலிபால் ஹால், வெய்ட்லிப்டிங், டென்னிஸ், டேபில் டென்னிஸ் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களை இக்கல்வி நிறுவனம் உருவாக்குகிறது.
தகுதிகள்:
டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் படிப்பில் சேர குறைந்தது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒலிம்பிக், ஆசிய, காம்ன்வெல்த், சீனியர் வேல்ர்டு சாம்பியன்ஷிப், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் வேண்டும்.
விபரங்களுக்கு:
இணையதளம்:
https://nsnis.org/
தொலைபேசி:
0175-2394261