ஏப் 29, 2024 12:00 AM
ஏப் 29, 2024 12:00 AM

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச் - ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,' நடத்தும் பிரத்யேக திறன் தேர்வு - ஐ.ஏ.டி.,
முக்கியத்துவம்
இத்தேர்வு எழுதுவதன் வாயிலாக, பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொகாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய நகரங்களில் செயல்படும் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளில் சேர்க்கை பெறலாம். மேலும், பெங்களூருவில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் சென்னையில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வழங்கும் குறிப்பிட்ட படிப்புகளிலும் சேர்க்கை பெற முடியும்.
படிப்புகள்:
ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,:
* பி.எஸ்., - 4 ஆண்டுகள்
* பி.எஸ்-எம்.எஸ்., (டியூல் டிகிரி) - 5 ஆண்டுகள்
ஐ.ஐ.எஸ்சி., - பெங்களூரு: பேச்சுலர் ஆப் சயின்ஸ் (ரிசர்ச்)
ஐ.ஐ.டி., - சென்னை: பி.எஸ்.,- மெடிக்கல் சயின்சஸ் அண்டு இன்ஜினியரிங்
கல்வித் தகுதி:
12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். உயரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களை படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:
முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக நாட்டின் பல்வேறு நகரங்களில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஆப்டிடியூட் தேர்வு - ஐ.ஏ.டி., நடத்தப்படுகிறது. உயரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 15 கேள்விகள் வீதம் மொத்தம் 60 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 240 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தவறான பதிலுக்கு தலா ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கு எந்த மதிப்பெண் பிடித்தமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
https://cdn.digialm.com//EForms/configuredHtml/2245/88215/Registration.html எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஐ.ஐ.எஸ்.சி., மற்றும் ஐ.ஐ.டி.,-சென்னை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற, ஐ.ஏ.டி., தேர்வுக்கு விண்ணப்பிப்பது உடன் அந்தந்த கல்வி நிறுவனங்களின் இணையதளம் வாயிலாக பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
விபரங்களுக்கு:
www.iiseradmission.in