ஜன 16, 2025 12:00 AM
ஜன 16, 2025 12:00 AM

கலையில் ஆர்வமும், திறமையும் உள்ள இந்தியா இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோருக்கான உதவித்தொகை திட்டங்களை பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன் கடந்த 40 ஆண்டுகளாக 'சார்லஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட்', செயல்படுத்தி வருகிறது.
கலை மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு துறைகளில் உயர்கல்விக்கான உதவித்தொகை:
கலைஞர்களுக்கான இந்த உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக, தகுதியானவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஓர் ஆண்டுகால முதுநிலை படிப்பை மேற்கொள்ளலாம்.
உதவித்தொகை: இங்கிலாந்தில் தங்குமிடம், இதர செலவுகள் மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து செலவினங்களுக்கு 700 பவுண்டுகள். விசா, உள்நாட்டு போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவீனங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது இல்லை.
கலை பிரிவுகள்:
* விசுவல் ஆர்ட்ஸ்
* பர்பாமன்ஸ் ஆர்ட்ஸ் - நடனம், நாடகம், இசை, இயக்கம்
* பிலிம் - திரைக்கதை எழுதுதல் மற்றும் இயக்கம் உட்பட சினிமா சார்ந்த பணிகள்
* போட்டோகிராபி
* டிசைன்
* ஆர்ட்ஸ் ஹிஸ்ட்ரி
பாரம்பரிய பாதுகாப்பு:
* பாதுகாப்பு கட்டடக்கலை
* பாரம்பரிய தளங்களின் மேலாண்மை மற்றும் திட்டங்கள்
* மரம், கல், உலோகம், ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் புகைப்படம் போன்ற பொருட்களின் பாதுகாப்பு
* அருங்காட்சியக மேலாண்மை
* பொறியியல், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பு
தகுதிகள்:
* இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
* 28 முதல் 38 வயதுக்குள் இருக்க வேண்டும்
* கடந்த ஐந்து ஆண்டுகளில் சார்லஸ் வாலஸ் உதவித்தொகையை பெற்றவராக இருக்கக் கூடாது
* உரிய கல்வித் தகுதி அல்லது தொழில்முறை தகுதி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றவராக இருப்பது வரவேற்கத்தக்கது
தேவைப்படும் ஆவணங்கள்:
* ஆங்கில மொழிப் புலமைக்கான ஐ.இ.எல்.டி.எஸ்., சான்றிதழ்
* விண்ணப்பித்த பாடத்திட்டம் மற்றும் அவை சார்ந்த சான்றுகள்
* இங்கிலாந்தில் எதிர்பார்க்கும் கல்வி அனுபவங்கள் மற்றும் இந்திய திரும்பிய பிறகான திட்டங்கள் ஆகியவை குறித்த சுய விளக்கம்
'விசிட்டிங் பெல்லோஷிப்':
வரலாற்று நிபுணர்கள், சமூக அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் இத்திட்டத்தின் கீழ், இங்கிலாந்தில் உள்ள குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்கள் வரை தேவையான அனுபவத்தை பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவித்தொகை வழங்கும் கல்வி நிறுவனங்கள் வேறுபடுகின்றன. 2025ம் ஆண்டிற்கான கல்வி நிறுவனங்களின் பட்டியலை https://www.charleswallaceindiatrust.com/visiting-fellowships எனும் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தகுதிகள்:
* தற்போது இந்தியாவில் வாழுந்து கொண்டிருக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
* வயது வரம்பு 25 முதல் 45க்குள் இருத்தல் வேண்டும். எனினும், மொழிபெயர்ப்பாளர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை
* முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது குறைந்தது 5 வருட தொழில்முறை அல்லது கல்வி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
* முந்தைய 5 ஆண்டுகளில் சார்லஸ் வாலஸ் உதவித்தொகையை பெற்றவராக இருத்தல் கூடாது
ஆராய்ச்சி உதவித்தொகை:
குறுகிய கால ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 பேருக்கும், அதிகபட்சமாக 20 பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர். இவை முதன்மையாக கல்வி சார்ந்த ஆராய்ச்சி அறிஞர்களுக்காக வழங்கப்படுகின்ற போதிலும், கலை அல்லது பாரம்பரிய பாதுகாப்புத் துறைகளில் பணிபுரியும் வல்லுநர்களும் குறுகிய கால ஆராய்ச்சிக்காக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் தலா 1,750 பவுண்டுகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் மூன்றுவார காலத்திற்கு தங்குவதற்கான செலவீனங்கள் இத்திட்டத்தில் அடங்கும். ஆனால், விசா கட்டணம் மற்றும் இந்திய நாட்டிற்குள்ளான பயணச் செலவீனங்கள் மற்றும் மருத்துவ காப்பீட்டு கட்டணம் ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதில்லை.
* தற்போது இந்தியாவில் வாழுந்து கொண்டிருக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
* 25 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
* சிறந்த ஆங்கில அறிவு அவசியம்
* நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆராய்ச்சி அல்லது துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டத்தின் இறுதி கட்டத்தில் இருக்க வேண்டும்.
* முந்தைய ஐந்து ஆண்டுகளில் சார்லஸ் வாலஸ் திட்டத்தில் உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது.
பிரிவுகள்:
* வரலாறு
* இலக்கியம்
* தொல்லியல்
* கலை வரலாறு
* தத்துவம்
* பர்பாமிங் அண்டு கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்
விபரங்களுக்கு:
https://www.charleswallaceindiatrust.com/scholarships