/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
உலகளாவிய மருத்துவ கல்வியில் ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டுக்கான தேவை
/
உலகளாவிய மருத்துவ கல்வியில் ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டுக்கான தேவை
உலகளாவிய மருத்துவ கல்வியில் ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டுக்கான தேவை
உலகளாவிய மருத்துவ கல்வியில் ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டுக்கான தேவை
ஜன 16, 2025 12:00 AM
ஜன 16, 2025 12:00 AM

மக்கள் தொகையின் சராசரி வயது அதிகரித்துவரும் நிலையில், ஹெல்த் கேர் அமைப்பை பயன்படுத்துவதற்கான உரிமையும் மேலெழுகிறது. உலகளாவிய அளவில் ஹெல்த் பிரச்சினைகள் அதிகரித்துவரும் நிலையில், அத்தகைய தேவைகளுக்கு இணங்க ஹெல்த்கேர் பணியாளர் அமைப்பும் மாற்றம் கண்டுவருகிறது.
இதன் விளைவாக முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட உலகளவில் மருத்துவக் கல்விநிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்றையத் தேதியில் இந்தியாவில் 650க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன மற்றும் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,00,000த்தை எட்டிவிட்டது. அதற்கிணங்க மருத்துவப் பணியாளர்களின் தொழில் முன்னேற்றதிற்கு ஊக்கமளித்து உதவும் வகையில் தர மதிப்பீட்டு அமைப்புக்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டியதன் அவசியத்தை இந்த அதிவிரைவான விரிவாக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலகளாவிய மருத்துவக் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி
மக்கள் தொகையியல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் விளைவாக தகுதிவாய்ந்த சிறந்த கல்வியறிவுடன் கூடிய ஹெல்த்கேர் பணியாளர்களுக்கான தட்டுப்பாடு உலகளவில் அதிகரித்துவருகிறது. இதன் விளவாக மருத்துவ கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிவிரைவாக அதிகரித்துவருவது காணப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணக்கீட்டின் படி இன்றைய தேதியில் உலகில் மருத்துவக் கல்விநிலையங்களின் எண்ணிக்கை 3,000 க்கும் அதிகமாக இருக்கின்றது. இவற்றிலிருந்து புதிதாக பயிற்சி பெற்று வெளிவரும் மருத்துவர்களின் எண்ணிக்கை 400,000 க்கும் அதிகமாக இருக்கிறது மற்றும் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளை கையாள்வதற்கான தேவை உலகளவில் அதிகரித்து வருவதை மருத்துவ தொழில் நிபுணர்களின் எண்ணிக்கையில் காணப்படும் இந்த வளர்ச்சி சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.
கடந்த காலங்களில் மருத்துவக் கல்வியின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் இந்தியா சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் புகழ்பெற்று விளங்கின. இந்தியாவில் மட்டுமே 650க்கும் அதிகமான மருத்துவக்கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 1,00,000 எம்.பி.பி.எஸ்., பட்டதாரிகள் உருவாகி வந்தனர். நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு எதிர்வினையாற்றும் வகையில் அதிகளவிலான ஹெல்த் கேர் வழங்குனர்களை உருவாக்கி இது ஈடு செய்தது. அதே போன்றே சீனாவிலும் நிலையான மருத்துவ கல்வி நிலையங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது, மற்றும் அதன் 197 மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக்கு 2,00,000 மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்கிவருகிறது.
எல்லை கடந்த மருத்துவக் கல்வியின் சவால்கள்
புதிதாய் உருவாகிவரும் மருத்துவ கல்வி நிலையங்கள் பேரார்வத்துடனன மன எழுச்சியின் அடிப்படையில் இல்லாமல் எண்ணிக்கையில் மட்டுமே அதிரித்துவருவது மருத்துவகல்வியின் தரத்துக்கு கேடு விளைவிக்கும், இதற்குக் காரணம் பரவலாக அதிகரித்துவரும் பெரும்பாலான பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் அனைத்துமே தங்கள் உயர்தரமான கல்வியை வழங்குகிறோம் என்று அறிவிப்பதுதான். பல்கலைக்கழகங்களுக்கிடையே கல்வி கற்பிக்கும் திறன் தர அளவீடுகளில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக அவை வழங்கும் பயிற்சி மற்றும் ஹெல்த் கேர் தரத்திலும் வெளிப்படுவதால் ஏழ்மையான நாடுகளில் இருந்து வரும் மருத்துவ மாணவர்களின் கல்வித் தரம் குறிப்பிட்டவகையில் குறைவாகவே இருக்கிறது.
உயர்தரமான கல்வியை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மருத்துவப் பட்டத்தை பெற ஆவலோடு இருக்கும் பன்னாட்டு மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் இந்த நிலை நோயாளிகளின் பாதுகாப்பை சமரசத்துக்குள்ளாக்கி கேள்விக்குறியாக்கிவிடும் வாய்ப்பையும் கொண்டுள்ளது அதன் விளைவாக ஆரோக்கியம் தொடர்பான அனைத்துக் கட்டமைப்புக்களின் செயல்திறனும் பாதிக்கப்படும்.
இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காண அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் தர மதிப்பீட்டு நடைமுறைகளையும் ஒரே அளவீட்டின் கீழ் கொண்டு வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களுக்கு வழங்கும் மருத்துவக் கல்வி பயிற்சி ஏற்றுக்கொள்ளத்தக்க தரத்துடனும், அத்துடன் அந்த குறிப்பிட்ட கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மருத்துவர்கள் வழக்கமான ஹெல்த் கேர் சேவைகளை வழங்குவதற்கான தகுதியைக் கொண்டிருப்பதையும் கண்காணிப்பதில் தரமதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கும் அமைப்புக்களின் பங்கு மிக முக்கியமானது
ஒருங்கிணைந்த தரமதிப்பீட்டு வரையறைகளுக்கான தேவை
மருத்துவக் கல்வியில் வழங்கப்படும் உத்திரவாத நடைமுறைகளில் தர மதிப்பீடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தர மதிப்பீடு சான்றிதழ் வழங்கும் ஒரு பொதுவான அமைப்பு இல்லாத நிலையில், மருத்துவக் கல்லூரிகளின் செயல்திறன் அல்லது பல்வேறு ஹெல்த் கேர் அமைப்புக்களில் பணிபுரிய மருத்துவப் பட்டதாரிகள் தயார் நிலையில் இருப்பதை மதிப்பீடு செய்ய வேறு எந்த ஒரு இதர வழிமுறையும் இல்லை. மருத்துவக் கல்லூரிகளுக்கான பன்னாட்டு தர மதிப்பீட்டு சான்றிதழ் நடைமுறைகளை வளர்த்தெடுத்ததில் - வேர்ல்ட் பெடரேஷன் பார் மெடிக்கல் எஜுகேஷன் (WFME)மற்றும் லையைசன் கமிட்டி ஆன் மெடிக்கல் எஜுகேஷன் (LCME)ஆகிய இரு நிறுவனங்கள் முன்னணி வகித்தன.
மருத்துவ பட்டம் பெற்றுவரும் அனைத்து மாணவர்களும் அவர்கள் எந்த கல்லூரியில் கல்வி பயின்றார்கள் என்பதை பொருட்படுத்தாது அவர்கள் திறமை வாய்ந்தவர்களாக நன்னடத்தை நெறிமுறை சார்ந்தவார்களாக இருப்பதை உறுதி செய்ய, இந்த நிறுவனங்கள் மருத்துவப் பயிற்சிக்கான சூழமைப்பை உலகளாவிய அளவில் மிகவும் சீராக ஒழுங்கமைத்து நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு வழிவகை செய்கின்றன.
சமீபத்தில் மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் மருத்துவத் தொழிலை வெளிநாடுகளில் மேற்கொள்ள விரும்புவதால், அவர்களின் தகுதிவரன்முறைகளை அவர்கள் தேர்வு செய்யும் நாட்டின் தேவைகளுக்கு இணங்க பூர்த்திசெய்யவேண்டும். உதாரணமாக இந்தியா அல்லது பிலிப்பைன்ஸ் மருத்துவப் பட்டதாரிகள் அமெரிக்க நாட்டில் மருத்துவ சேவையை தொடர விரும்பினால், அவர்களது தகுதியை நிரூபிக்க யுனைட்டட் ஸ்டேட்ஸ் மெடிக்கல் லைசென்ஸிங் எக்ஸாமினேஷன் (USMLE) போன்ற தேர்வுகளை எழுதவேண்டிய தேவை இருக்கும்.
ஒருங்கிணைந்த தர மதிப்பீட்டு அமைப்பு போன்ற ஒன்று இருந்தால் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு செல்லும் மருத்துவ பட்டதாரிகள் எந்த ஒரு கூடுதல் தேர்வு எழுத வேண்டிய எந்த தடையும் இல்லாமல் இந்த நடைமுறைகளை மிகவும் எளிதாக்கிவிடும் தவிர, தற்போதும் மற்றும் எதிர்காலத்திலும் மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய வாய்ப்புள்ள சூழலில் தற்கால ஹெல்த்கேர் சேவைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய பன்னாட்டு கூட்டாண்மை அவசியம் தேவை என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. அமெரிக்க மற்றும் கனடா நாட்டு மாணவர்களிடையே கரீபியன் தீவு மருத்துவக் கல்லூரிகள் பிரபலமடைந்துள்ளன.
கரீபியன் நாட்டில் மட்டுமே 50க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன மற்றும் அவை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கிவருவதாக அசோசியேஷன் ஆப் அமெரிக்கன் மெடிக்கல் காலேஜஸ் (AAMC) தெரிவிக்கிறது.
தரக் கட்டுப்பாடு மற்றும் தரவரையறைகளை உறுதி செய்தல்
மருத்துவக் கல்வியறிவின் தரத்தை எண்ணிக்கையில் உலகளவில் அதிகரித்துவரும் மருத்துவக்கல்லூரிகள் குறைத்துவிடாமல் இருப்பதை கவனத்தில் கொள்வது மிக முக்கியம். கல்வித் தரக்கட்டுப்பாட்டுகள் தொடர்பாக, மருத்துவக் கல்வி அனுபவம், மருத்துவ பயிற்சி, கருவிகள் வள மூலாதாரங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையினான மருத்துவப் பயிற்சிகள் போன்ற விரிவான அளவில் கட்டுப்பாட்டு வரையறைகளை WHO நிறுவனம் வகுத்தமைத்து வழங்கியுள்ளது. அதன் காரணமாகத்தான், அதன் அடிப்படையில் இந்த அனைத்து தர வரையறைகள் முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்த்து அங்கீகாரம் அளிப்பதற்கு WFME மற்றும் LCME போன்ற இதர அமைப்புக்கள் நம்மிடையே இருக்கின்றன.
இதர நாடுகளுக்கு மத்தியில், மருத்துவ கல்லூரிகளுக்கான உயர்தரவரையறைகளைக் கொண்ட அங்கீகாரம் பெற்ற தனியார் தர சான்றிதழ் அமைப்புக்களை அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உருவாக்கியிருக்கின்றன. தரவரையறைகளுக்கான சான்றிதழை தொடர்ந்து முறையாக வழங்கும் ஒரு சில முகைமைகளில் அமெரிக்காவிலுள்ள அக்ரடிஷன் கவுன்சில் பார் கிராஜூவேட் மெடிக்கல் எஜுகேஷன் (ACGME) இங்கிலாந்திலுள்ள ஜெனரல் மெடிக்கல் கவுன்சில் (GMC) ஆகியவை உள்ளடங்கும். மேலும் நமது மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளித்து அனுப்பும் எந்த ஒரு மருத்துவ கல்லூரிகளும் தரமான ஹெல்த் கேர் சேவைகளை வழங்கும் தகுதி கொண்டவை என்பதையும் உறுதி செய்வதன் மூலம் மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதையும் இந்த முகைமைகள் உறுதி செய்கின்றன.
முடிவு
இந்த புதிய மற்றும் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் வளர்ச்சியானது தொழில்முறை ஹெல்த் கேர் மருத்துவர்களுக்கான தேவை அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டுவதோடு, மருத்துவக் கல்வியை வரைமுறைப்படுத்துதல் மற்றும் அதன் தர மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த இலக்கைக் அடைய, நாடுகளின் எல்லைகளுக்கிடையே பயன்படத்தக்க செயல்திறன் மிக்க மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவப் பட்டதாரிகள் சிறப்பாக தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய தரவரன்முறை அங்கீகார நடைமுறைகள் இணக்கப்படுத்தவேண்டியது அத்தியாவசியம்.
உலகளவில் பல்வேறுபட்ட மக்கள் தொகையினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இணங்க மருத்துவத் தொழில் நுட்ப ரீதியாக திறமை வாய்ந்த நன்னடத்தை தவறாத மருத்துவர்களை உருவாக்கும் திறனை பெற்றிருப்பதில் மருத்துவ கல்வியின் எதிர்காலம் அமைந்திருக்கும்.
-காட்வின் பிள்ளை, மேனேஜிங் டைரக்டர், டிரான்ஸ்வேர்ல்ட் எஜுகேர் மற்றும் சேர்மன், கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி