sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வணிகப் பள்ளிகளை தேர்வு செய்கையில் கருத்தில் கொள்ள வேண்டியவை

/

வணிகப் பள்ளிகளை தேர்வு செய்கையில் கருத்தில் கொள்ள வேண்டியவை

வணிகப் பள்ளிகளை தேர்வு செய்கையில் கருத்தில் கொள்ள வேண்டியவை

வணிகப் பள்ளிகளை தேர்வு செய்கையில் கருத்தில் கொள்ள வேண்டியவை


டிச 03, 2014 12:00 AM

டிச 03, 2014 12:00 AM

Google News

டிச 03, 2014 12:00 AM டிச 03, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வணிகப் பள்ளிகளை தேர்வு செய்கையில், ராங்கிங், பணி வாய்ப்புகள், ஸ்பெஷலைசேஷன் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களை நாம் ஆய்வு செய்கிறோம். அவை குறித்த ஒரு சிறு அலசலை இந்தக் கட்டுரை நமக்கு வழங்குகிறது.

ராங்கிங்

ஒரு நல்ல வணிகப் பள்ளியை தேர்வு செய்வதில், தேவையான தகவல்களைத் தருவதில் ராங்கிங் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் எம்.பி.ஏ., படிக்க விரும்பினாலே, ராங்கிங் குறித்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் தந்து விஷயங்களை ஆராய வேண்டும்.

ஒரு வணிகப் பள்ளியின் நிலை, அதன் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு, பணியாற்றும் ஆசிரியர்களின் தரம், மாணவர்களின் கல்வி நிலை, உள்கட்டமைப்பு, அக்கல்வி நிறுவனத்திற்கான அங்கீகாரம் மற்றும் அதன் அமைவிடம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை, ராங்கிங் மூலமாக மதிப்பிட முடியும்.

வெளிநாட்டில் சிறந்த எம்.பி.ஏ.,

ஸ்டான்போர்டு பிசினஸ் ஸ்கூல், ஹாவர்டு பிசினஸ் ஸ்கூல், ஆசியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் - பிலிப்பைன்ஸ், Ivy Leagues மற்றும் INSEAD போன்றவை பிரபல வெளிநாட்டு வணிகப் பள்ளிகள்.

அதேசமயம், மேற்கண்ட பெயர்களைத் தவிர, வெளிநாட்டில் இருக்கும் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளையும் மாணவர்கள் அலட்சியம் செய்யக்கூடாது. அத்தகைய கல்வி நிறுவனங்கள், குறைந்த செலவில் தரமான மேலாண்மை கல்வியை வழங்கக்கூடியவை.

நாடு, நாட்டின் குறிப்பிட்ட பகுதி, கட்டணம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவை குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு, நமக்கான எம்.பி.ஏ., கல்வி நிறுவனத்தை தேர்வுசெய்ய வேண்டும். இவைதவிர, ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றிய தெளிவான தகவல்களைப் பெற, அங்கே படித்த முன்னாள் மாணவர்கள் சிறப்பான வகையில் நமக்கு உதவுவார்கள்.

எம்.பி.ஏ., ஸ்பெஷலைசேஷன்களும், கல்வி நிறுவனங்களும்

எம்.பி.ஏ.,வில் பல ஸ்பெஷலைசேஷன்கள் இருப்பது நமக்குத் தெரியும். ஒவ்வொரு புகழ்பெற்ற வணிகப் பள்ளியும், ஒவ்வொரு வகையான ஸ்பெஷலைசேஷன் படிப்பை வழங்குவதற்கு பெயர் பெற்றவை. அந்த வகையில், இந்தியாவின் ஒருசில வணிகப் பள்ளிகளை மட்டும் நாம் இங்கே உதாரணமாக காணலாம்.

ஸ்பெஷலைசேஷன் - கல்வி நிறுவனம்

HR (Human Resource)  -  XLRI, IIM - Ahmedabad

Operations  -  IIM - Bangalore, IIT - Delhi, IIT - Bombay, NITIE

Finance  -  IIM - Ahmedabad, IIM - Bangalore, IIT - Delhi

Information Technology  -  IIM - Calcutta, IIM - Bangalore, IIT - Delhi

International Business  -  IIM - Ahmedabad, FMS - Delhi

Rural Management  -  Institute of Rural Management - Jaipur

Agri - Business  -  IIM - Ahmedabad, IIM - Lucknow

Health Care  -  FMS, Goa Institute of Management.

பணி வாய்ப்பும், உள்கட்டமைப்பும்

வெறும் கண்ணுக்குப் புலனாகும் அம்சங்களை மட்டுமே வைத்து ஒரு வணிகப் பள்ளியை மதிப்பிடுவது சரியான செயலல்ல. ஏனெனில், பல வணிகப் பள்ளிகள், பார்ப்பதற்கு பெரிய பெரிய கட்டடங்களைக் கொண்டிருப்பதுபோல தோன்றும்.

ஆனால், அங்கே கல்வித்தரம் மோசமாக இருக்கும். கல்விக் கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் இருக்காது. வேலை வாய்ப்புகள் என்பதைத் தாண்டி, கற்பித்தல் முறை, தகுதியான ஆசிரியர்கள், நூலக வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் கார்பரேட் உலகின் அம்சங்கள் போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஒரு மேலாண்மை கல்வி நிறுவனம் சிறப்பான என்பதை உங்களால் கண்டறிய முடிந்தால், அதற்கடுத்த படி, அதில் சேர்க்கைப் பெற முயல்வதுதான். ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றி பலவிதமான சர்வேக்கள் வெளியிடப்பட்டாலும், புகழ்பெற்ற பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளிவரும் சர்வேக்களை மட்டுமே நம்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us