தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் சிவில் இன்ஜினியரிங்

சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் சிவில் இன்ஜினியரிங்

சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் சிவில் இன்ஜினியரிங்


ஜூலை 24, 2026 03:31 PM

ஜூலை 24, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 24, 2026 03:31 PM ஜூலை 24, 2026 03:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் மிக முக்கியமான பொறியியல் துறை சிவில் இன்ஜினியரிங்.
வழக்கமான கட்டுமான பணிகளில் மட்டுமின்றி, நகர திட்டமிடல், பசுமை கட்டடங்கள், நிலத்தடி நீர் பாதுகாப்பு, நிலைதக்க வளர்ச்சி போன்றவற்றிலும் சிவில் இன்ஜினியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இளநிலை படிப்பு


இளநிலை படிப்பில் கட்டடக்கலை, கட்டுமான பொறியியல், நில அளவையியல், பசுமை கட்டட நுட்பம், நிலத்தடி நீர் மேலாண்மை, சாலை மற்றும் பாலம் வடிவமைப்பு, கட்டடப் பொருட்கள், சுற்றுச்சூழல் பொறியியல், தரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளை பயில்கின்றனர். இளநிலை படிப்பில் சேர, மாணவர்கள் 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை படிப்பு பாடத்திட்டம்

முதுநிலை படிப்பில் கட்டுமான மேலாண்மை, நிலத்தடி நீர் வசதி, பசுமை தொழில்நுட்பங்கள், நிலச்சரிவு பாதுகாப்பு, போக்குவரத்து திட்டமிடல், சூழலியல் பொறியியல், நில அளவையியல் தொழில்நுட்பங்கள் போன்ற நுண்ணறிவுகள் கற்பிக்கப்படுகின்றன. முதுநிலை படிப்பில் சேரட், பி.இ., / பி.டெக்., அல்லது தொடர்புடைய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு


சிவில் இன்ஜினியரிங் துறையில் படிப்பை முடித்த பின், அரசு மற்றும் தனியார் துறைகளில் பரந்த வேலை வாய்ப்புகள் உள்ளன. கட்டட வடிவமைப்பு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கான்ட்ராக்ட் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன. சுயதொழிலையும் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.

எதிர்கால வளர்ச்சி


நகரமயமாதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டிகள், பசுமை கட்டடங்கள், பன்னாட்டு திட்டங்கள் போன்றவை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதால், சிவில் இன்ஜினியர்களுக்கு நிலையான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. 3டி பிரிண்டிங், பி.ஐ.எம்., (கட்டடத் தகவல் மாதிரியாக்கம்), ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ், ஜி.ஐ.எஸ்., தொழில்நுட்பம், நிலையான கட்டுமானம் போன்ற நவீன நுட்பங்களை கற்றுக்கொள்வதன் மூலம் இந்த துறையில் வேகமாக முன்னேற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us