தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்


ஜூலை 26, 2026 10:51 AM

ஜூலை 26, 2026 10:51 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 26, 2026 10:51 AM ஜூலை 26, 2026 10:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெக்கானிக்கல் பொறியியல் என்பது இயந்திரங்கள், இயக்கம், சக்தி மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களைப் பற்றிய அடிப்படை மற்றும் பரந்த துறை. இத்துறை கற்பித்தலின் மூலமாக, மாணவர்கள் இயந்திர வடிவமைப்பு, உற்பத்தி செயல்முறை, தானியங்கி அமைப்புகள், வாகனங்கள், விமானங்கள், உற்பத்தி கருவிகள் ஆகியவற்றை உருவாக்கும் திறனைப் பெறுகிறார்கள்.

இளநிலை படிப்பு


இளநிலை பாடத்திட்டத்தில் இயந்திர வடிவமைப்பு, வெப்பநிலை மற்றும் திரவவியல், உற்பத்தித் தொழில்நுட்பம், இயந்திர இயக்கம், திட்டப்பணிகள் மற்றும் தொழிற்பயிற்சி போன்றவை அடங்கும். இது மாணவர்களை தொழிற்துறையில் வேலைவாய்ப்பிற்கு தயார் செய்கிறது.

முதுநிலை படிப்பு


இதில் மேம்பட்ட வெப்ப இயக்கவியல், வரையறுக்கப்பட்ட தனிம முறைகள், ரோபாட்டிக்ஸ், கணக்கீட்டு திரவ இயக்கவியல், மேம்பட்ட இயந்திர வடிவமைப்பு, மற்றும் ஆராய்ச்சி முறைமை போன்ற உயர் நிலை பாடங்கள் இடம் பெறுகின்றன.

வேலை வாய்ப்பு


மாணவர்கள் உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் துறை, விமானப் பாகங்கள் உற்பத்தி, வினியோகம், பராமரிப்பு, எரிசக்தி துறைகள், ரோபாட்டிக்ஸ், ஆய்வுத் துறைகள், அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். அதேபோல், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் பட்டதாரி தேர்வுகள் வாயிலாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் போராசிரியராகவும் பணியாற்றலாம்.

எதிர்கால வளர்ச்சி


தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்து வலுப்பெற்று வருகிறது. ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், 3டி பிரிண்டிங், மெக்காட்ரானிக்ஸ் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களில் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us