sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

2014 கிளாட் தேர்வின் புதிய அம்சங்கள் மற்றும் தயாராகும் முறைகள்

/

2014 கிளாட் தேர்வின் புதிய அம்சங்கள் மற்றும் தயாராகும் முறைகள்

2014 கிளாட் தேர்வின் புதிய அம்சங்கள் மற்றும் தயாராகும் முறைகள்

2014 கிளாட் தேர்வின் புதிய அம்சங்கள் மற்றும் தயாராகும் முறைகள்


பிப் 28, 2014 12:00 AM

பிப் 28, 2014 12:00 AM

Google News

பிப் 28, 2014 12:00 AM பிப் 28, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிளாட் எனப்படும் பொது சட்ட நுழைவுத்தேர்வு செயல்பாட்டில், இந்தாண்டு ஆன்லைன் கவுன்சிலிங் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இடங்கள் காலியாக விடப்படுவது தவிர்க்கப்படும்.

2014ம் ஆண்டிற்கான பொது சட்ட நுழைவுத்தேர்வு, குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால், வரும் மே மாதம் 11ம் தேதி நடத்தப்படவுள்ளது. அத்தேர்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து, அதன் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.தாமஸ் மேத்யூ அளித்தப் பேட்டி.

CLAT 2014 -க்கான தயாரிப்பு வியூகங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

தேர்வெழுதும் ஒருவர், தனது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைக் குறித்து தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். தாம் பலவீனமாக இருக்கிறோம் என்று நினைக்கும் அம்சங்களுக்கு அதிகநேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டியது அவசியம்.

சில தலைப்புகளில், சில மாணவர்கள், பிறரைவிட விரைவான புரிந்துணர்வுத் திறனைப் பெற்றிருப்பார்கள். அதேபோல், சிலருக்கு அவற்றைப் புரிந்து கொள்வதற்கு பிறரைவிட அதிகநேரம் தேவைப்படலாம். CLAT தேர்வு என்பது 5 பகுதிகளைக் கொண்டது. அவை,

English Comprehension, General Knowledge / Current Affairs, Elementary Mathematics, Legal Aptitude and Logical Reasoning போன்றவையே அவை.

Legal Aptitude போன்ற பாடங்களை படிப்பதில், மாணவர்களுக்கு உங்களின் ஆலோசனைகள் என்ன?

தங்களின் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்து, CLAT தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், முந்தைய ஆண்டு CLAT தேர்வு கேள்வித்தாள்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான், கேள்விகள் எவ்வாறு கேட்கப்படும் என்பதைப் பற்றிய தெளிவு பெற முடியும்.

அந்த கேள்வித்தாள்களை, CLAT அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்மூலம், எந்தெந்த பிரிவுகளில், எவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.

BA LLB மற்றும் LLB படிப்புகளுக்கான வித்தியாசம் என்ன? எது சிறந்தது?

LLB படிப்பு என்பது, 3 ஆண்டுகள் கொண்ட பாரம்பரிய பட்டப் படிப்பாகும். ஒருவர் இளநிலைப் படிப்பை முடித்தப் பிறகு இதை மேற்கொள்ளலாம். அதேசமயம் BA LLB என்பது ஒரு கூட்டு பட்டப் படிப்பாகும் மற்றும் இதன் நோக்கம் தெளிவானது.

இப்படிப்பை மேற்கொள்வதன் மூலம், மாணவர்கள் தெளிவான முறையில் சட்ட விஷயங்களின்பால் கவனம் செலுத்த முடியும். இப்படிப்பில், தியரி அறிவுடன், நடைமுறை நீதிமன்ற அனுபவமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

CLAT விண்ணப்பக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரணம் என்ன?

இந்த ஆண்டு CLAT தேர்வானது, ஆன்லைன் விண்ணப்ப செயல்பாடு மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங் ஆகிய புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. தேர்வு முடிந்தவுடன் கவுன்சிலிங் வழங்கப்படும். மாணவர்களின் வசதிக்காக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, CLAT தேர்வை எழுதுவோருக்கு எழும் சந்தேகங்களை போக்கும் வகையில், Helpdesk -ல், இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்கூறிய ஏற்பாடுகளை செய்வதற்காக, ஒரு மென்பொருள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு ஆகியவையும் ஆன்லைன் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கவுன்சிலிங் மாணவர்களுக்கு எவ்வாறு உதவிகரமாக இருக்கும்?

முன்பெல்லாம், தங்களுக்கு விருப்பமான தேசிய சட்டப் பள்ளியை குறிப்பிட, விண்ணப்ப படிவத்தில் அதன் பெயரை எழுதினார்கள். ஆனால், இந்தாண்டு முதல் ஆன்லைன் கவுன்சிலிங் முறை கொண்டு வரப்பட்டதிலிருந்து, தேர்வை எழுதிய பிறகுதான், தங்களுக்கான விருப்ப தேசிய சட்டப் பள்ளியை தேர்வுசெய்ய முடியும்.

தேர்வில் ஒருவரின் செயல்பாட்டைப் பொறுத்து, அவர் தனக்கு விருப்பமான தேசிய சட்டப் பள்ளியை தேர்வு செய்யலாம். முன்பு, ஒரு விருப்பமான தேசிய சட்டப் பள்ளியை ஒரு மாணவர் தேர்வு செய்து, தேர்வுக்குப் பிறகு, அதில் அவர் சேராமல் போகும்போது, அந்த இடங்கள் காலியாக இருக்கும் நிலைமை இருந்தது. இந்த நிலையை தவிர்க்கவே, ஆன்லைன் கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய சட்டப் பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் எப்படி?

தனியார் மற்றும் பொது சட்ட நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், கீழ்நிலை நீதித்துறைப் பணிகளிலும் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இதுதவிர, வங்கிகளில் பணி வாய்ப்புகளைப் பெறுவதுடன், பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகளையும் எழுதுகிறார்கள்.

தேசிய சட்டப் பள்ளிகளைத் தவிர, CLAT தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் இதர சட்டக் கல்வி நிறுவனங்கள் எவை?

தேசிய சட்டப் பள்ளிகளைத் தவிர்த்து, CLAT தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், CLAT அலுவலகத்தில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். CLAT தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்தும் சட்டக் கல்வி நிறுவனங்களின் பெயர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

பள்ளிப் படிப்பை முடித்து, சட்டப் படிப்பை மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு இருக்கும் பணி வாய்ப்புகள் யாவை?

சிறப்பான பணி வாய்ப்புகள் உள்ளன. இளம் வழக்கறிஞர்கள், Litigation / Advocacy, Judiciary, Corporate Law Offices and Civil Services Examinations ஆகிய அம்சங்களில் தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்யலாம்.

நன்றி: கேரியர்ஸ்360






      Dinamalar
      Follow us