sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

பட்டய படிப்பா? பட்ட படிப்பா? தவிப்பை தவிருங்கள்

/

பட்டய படிப்பா? பட்ட படிப்பா? தவிப்பை தவிருங்கள்

பட்டய படிப்பா? பட்ட படிப்பா? தவிப்பை தவிருங்கள்

பட்டய படிப்பா? பட்ட படிப்பா? தவிப்பை தவிருங்கள்


மார் 01, 2014 12:00 AM

மார் 01, 2014 12:00 AM

Google News

மார் 01, 2014 12:00 AM மார் 01, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓவ்வொருவரும் தங்களது எதிர்காலம், படிப்பு போன்றவற்றை முடிவு செய்யும்பொழுது, தங்கள் கல்வி கற்கும் நிலை, காலம், பொருளாதார வசதி, வேலை வாய்ப்பு, வேலை கிடைக்கக்கூடிய ஊர், நண்பர்களின் ஆலோசனை என பல்வேறு காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

 

கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை என ஓவ்வொரு நிலையை அடையும் பொழுதும் என்ன படிக்கலாம்? எதைப் படிக்கலாம்? போன்ற குழப்பங்களுக்குப் பிறகு, குழப்பங்களுக்கான தீர்வினையும் ஓரளவு கண்டுகொண்டு தங்கள் கல்வி கற்றலை முடிக்கிறார்கள்.

 

அதே போன்று பெரும்பாலானோருக்கு குறிபிட்ட படிப்புகளை முடித்த பிறகு எந்த மாதிரியான வாய்ப்புகள் இருக்கிறது என தெரியாமலேயே, அதாவது சரியான வழிகாட்டி இல்லாததால், தங்களுக்கு ஏற்ற படிப்பை தேர்வு செய்யாத காரணத்தினால் பணத்தையும், காலத்தையும் வீணாக்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

அந்த வகையில் இளநிலை மற்றும் பட்டய படிப்புகளில் உள்ள வித்தியாசம், ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பன குறித்த தகவல்களைக் காண்போம்.

 

பட்டய படிப்பு

இளநிலை

கல்வித் தகுதி

பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2

பிளஸ் 2

கல்வி கற்கும் காலம்

1வருடம் முதல் 3 வருடம் வரை.

கலை, அறிவியல் படிப்புகள் 3 வருடம், பொறியியல் படிப்புகள் 4 வருடம், மருத்துவப் படிப்பு ஐந்தரை வருடம்.

பாடத்திட்டம்

Ø  தொழில் ரீதியான பாடங்கள் கற்றுத் தரப்படுகிறது. வேலைக்கு உடனடியாக செல்லும் வகையில் பாடத்திட்டங்கள் உள்ளது.

 

Ø  பாடத்திட்டங்கள் அடிப்படை அறிவை வளர்க்கும் விதமாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

 

Ø  நடைமுறை சார்ந்ததாகவும், களப்பயிற்சி சார்ந்ததாகவும் இருக்கிறது.

 

Ø  பெரும்பாலான பட்டய படிப்புகள் வேலைப் பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி சார்ந்ததாக இருக்கிறது அல்லது பயிற்சி தேர்வுகள் அதிகம் கொண்டதாக இருக்கிறது.

 

Ø  எ.கா: கணினி அறிவியல் பட்டய படிப்பில் செயல்பாட்டு மொழிகளும், கணினி வன் பொருள் குறித்தும் மட்டுமே பாடத்திட்டங்கள் இருக்கும்.

Ø  படிக்கும் துறையில் ஆழமான அறிவைப் பெற முடியும்.

 

Ø  அதிகமான பாடங்கள் படிக்கும் பாடப்பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.

 

Ø  ஒரு பாடம் மட்டும் முக்கியப் பாடமாக அனைத்து பாடங்களுடன் கற்றுத் தரப்படும்.

 

Ø  எ.கா: கணினி அறிவியல் பொறியியல் பிரிவை எடுத்துக்கொண்டோமானால், முதல் வருடத்தில் இயற்பியல், வேதியியல், மின் பொறியியல், இயந்திரவியல், பொறியியல் வரைபடம் ஆகியவற்றோடுதான் கணினி பாடத்திற்கான கணினி மொழி "கோபால்" கற்றுத்தரப்படும்.

அங்கீகாரம்

குறைவான மதிப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

அதிக மதிப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது. எளிதாக அங்கீகரிக்கப்படுகிறது.

படிப்பிற்கு பின்

இளநிலை படிக்க செல்லலாம் அல்லது வேலைக்கு செல்லல்லாம்.

 

எ.கா: பட்டய படிப்பில் மெக்கானிக்கல் எடுத்து படித்திருந்தால், பி.இ. மெக்கானிக்கல் இரண்டாம் வருடத்தில் நேரடியாக சேரலாம்.

படிக்கும் துறையில் மேலும் சாதிக்க முதுநிலை படிப்பை படிக்கலாம் அல்லது வேலைக்கு செல்லலாம்.

 

 

 

பொருளாதாரம்

குறைவான செலவு.

பட்டய படிப்பை விட 4லிருந்து 6 மடங்கு வரை செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

 

முதுநிலை பட்டயம், முதுநிலை ஆகியவற்றுக்கிடையேயான வித்தியாசங்கள்.

 

முதுநிலை பட்டயம்

முதுநிலை

கல்வித் தகுதி

இளநிலை

இளநிலை

கல்வி கற்கும் காலம்

1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை.

2 வருடம்

பாடத்திட்டம்

Ø ஒரு குறிப்பிட்ட தொழில் சம்பந்தமாகக் கற்றுத்தரப்படுகிறது.

 

 

 

Ø  கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

Ø  தேர்ந்தெடுத்த துறை சார்ந்த அறிவை அளிக்கிறது.

 

மேற்கண்ட தகவல்களில் தங்களுக்கு எந்த அம்சங்கள் சாதகமாக இருக்கும், எந்த அம்சங்கள் பாதகமாக இருக்கும் என்பதை ஆராய்ந்து சரியான படிப்பை தேர்ந்தெடுங்கள்.






      Dinamalar
      Follow us