sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இந்த நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உண்டு...!

/

இந்த நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உண்டு...!

இந்த நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உண்டு...!

இந்த நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உண்டு...!


செப் 29, 2014 12:00 AM

செப் 29, 2014 12:00 AM

Google News

செப் 29, 2014 12:00 AM செப் 29, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த சில ஆண்டுகள் பொருளாதார மந்தநிலை எனும் நோய் உலக பொருளாதாரத்தைப் பீடித்திருந்தது. இதனால், உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது நிலைமை சற்று மாறியுள்ளது.

நாம் எப்போதும் பெரிதாக கருத்தில் கொள்ளாத சில நாடுகள் சில சிறப்பான பணி வாய்ப்புகளை தன்னகத்தேக் கொண்டுள்ளன. எனவே, அத்தகைய நாடுகளை ஒதுக்குவதை விட்டு, அவற்றில் இருக்கும் வாய்ப்புகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தங்களுக்குள் சிறந்த பணி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் சில முக்கிய, அதேசமயம், நமது கவனத்தை அந்தளவு ஈர்க்காத நாடுகளைப் பற்றி பார்ப்போம்.

பொலிவியா

தென்அமெரிக்க கண்டத்தின் ஒரு பின்தங்கிய நாடாக முத்திரைக் குத்தப்பட்ட பொலிவியா, வேலை வாய்ப்புள்ள நாடாக பெரிதாக கருதப்பட்டதில்லை. ஆனால், அந்நாட்டின் தற்போதைய நிலை வேறுமாதிரி உள்ளது. தற்போது கடந்த காலத்தை நினைத்து பிரயோஜனமில்லை.

பொலிவியா பல்வேறு இயற்கை தாதுக்களுக்கு பெயர்பெற்ற நாடு. ஆனால், பல்லாண்டுகளாக, அதுதொடர்பான சிறந்த தொழில் வாய்ப்புகளுக்கான நாடாக பொலிவியா உருவாகவில்லை. அதேசமயம், தற்போது பல புதிய வணிக தொழில் வாய்ப்புகள் உருவாகும் நிலை வந்துள்ளது மற்றும் அதன்மூலம் பணி வாய்ப்புகளும் பெருகியுள்ளன.

நாட்டின் இயற்கை தாது வளங்களை ஏற்றுமதி செய்ததன் மூலமாக திரட்டப்பட்ட அபார நிதிவளத்தின் மூலமாக தொடங்கப்பட்ட வணிகத்தில், ஏராளமான வாய்ப்புகள் மக்களுக்கு கிடைத்துள்ளன. அதில் சில்லறை வர்த்தகமும் அடக்கம்.

சிலி

தென்அமெரிக்க கண்டத்தின் பல்வேறு நாடுகளிலும் வணிக வாய்ப்புகள் அதிகரித்து செல்லும் நிலையில், கடந்தாண்டு சிலி நாட்டின் வர்த்த செயல்பாடு சிறப்பான வகையில் அமைந்தது. தென்அமெரிக்காவில், விரைவாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில், சிலியின் பொருளாதாரமும் ஒன்றாக மாறியுள்ளது.

எதிர்காலத்தில், சிலி நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படும் சூழல்கள் நிலவுகின்றன. சிலி நாட்டில் சுரங்கத் தொழில்துறையில் அதிகளவு பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், அதுசார்ந்த இதர துறைகளிலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.

மெக்சிகோ

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் உலக நாடுகளில், மெக்சிகோவும் ஒரு முக்கிய நாடாகும். பழமையான மாயன் மற்றும் ஆஸ்டெக் நாகரீகங்கள் இந்த மண்ணுக்கு உரியவை. இந்த நாடும், தற்போது, வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. இந்த நாட்டில் நுகர்வோர் வளம் அதிகரித்துள்ளது.

கடந்த 80களின் தொடக்கத்தில் மற்றும் 90களின் மத்தியில், இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி சூழல்களோடு ஒப்பிடுகையில், தற்போது அந்த நாட்டின் நிலை நன்கு முன்னேற்றமடைந்துள்ளது. வேளாண் வணிகம், மீன் பிடித்தல், மேம்பாடு மற்றும் சேவைத் துறைகள் ஆகியவற்றில் அந்நாடு நல்ல வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

கனடா

அமெரிக்கா மற்றும் இதர சில ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், கனடாவின் பொருளாதாரம் மற்றும் பணி வாய்ப்புகள் ஒரு நிலையான தன்மையைக் கொண்டதாக கருதப்படுகிறது. அந்நாட்டு நிறுவனங்கள், தங்களுடைய பணியாட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக சர்வேக்கள் கூறுகின்றன.

போக்குவரத்து, உள்நாட்டு நிறுவனங்கள், இயக்க மேலாண்மை, ரியல் எஸ்டேட், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றில் அங்கே நல்ல வாய்ப்புகள் உள்ளன.

இந்த நாட்டில், வெளிநாட்டினருக்கு, கல்வி புராஜெக்ட்டின் காலஅளவு மற்றும் மாற்று பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பணி உரிமம்(work license) வழங்கப்படுகிறது. இதன்மூலம், தங்கும் உரிமத்தையும் கோர முடியும். முதிர்ச்சியடைந்த மக்களைக் கொண்ட கனடாவில், மாற்றுப் பணியாளர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.

பராகுவே

இந்நாட்டை பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால், நிலைமை தற்போது அப்படியில்லை. இங்கே பல வாய்ப்புகள் உள்ளன. நீண்டகாலம் காலனி ஆதிக்கத்தில் கஷ்டப்பட்ட இந்நாட்டில், தற்போது சிறப்பான சட்டங்கள் உள்ளன.

இங்கே, முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்நாட்டின் பொருளாதாரம் நிலையான தன்மையைக் கொண்டுள்ளது.

பிரேசில்

சில பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், பிரேசிலின் பொருளாதாரம் ஒரு மேம்பாட்டுத் தன்மையைக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு, அந்நாடுகளில் வழங்கப்படும் டாக்டரேட் பட்டங்களுடைய அதிக எண்ணிக்கை முக்கிய காரணம். குறிப்பாக, பிரேசிலின் முன்னேற்றத்திற்கு இந்த நிலை முக்கிய காரணம்.

பிரேசில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக உள்ளன. சுகாதார விழிப்புணர்வு, நிதி மேலாண்மை, நிலப் பயன்பாடு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, சில்லறை வணிகம் மற்றும் பொருள் பரிமாற்றம் ஆகிய துறைகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

பனாமா

நகர்ப்புற வளர்ச்சி, தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டமைப்பு மற்றும் பனாமா கால்வாய் விரிவாக்கம் போன்ற நடவடிக்கைகள் ஆகியவை அதிக வேலை வாய்ப்புகளை அளிக்க வல்லவை.

மேலும், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. இவைதவிர, வேளாண் வணிகம், மீன்பிடித்தல், சுரங்கம் மற்றும் பிரித்தெடுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவையும் அதிக பணி வாய்ப்புகளை வழங்கும் துறைகள்.






      Dinamalar
      Follow us