தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பாடங்களை முழுதும் படிக்காமல் மாதிரி தேர்வுகளை எழுதாதீங்க

பாடங்களை முழுதும் படிக்காமல் மாதிரி தேர்வுகளை எழுதாதீங்க

பாடங்களை முழுதும் படிக்காமல் மாதிரி தேர்வுகளை எழுதாதீங்க


மார் 31, 2026 12:23 PM

மார் 31, 2026 12:23 PM

Follow on GoogleFavourite on Google

மார் 31, 2026 12:23 PM மார் 31, 2026 12:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், கணித திறன், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், ஆங்கிலம் பேசும் திறன் அவசியம். இன்றைய காலத்தில், ஏ.ஐ., வளர்ச்சி கண்டாலும், அதனால், மனிதனின் திறனை வெல்ல முடியாது. எனவே, மாணவர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜே.இ.இ., நுழைவு தேர்வு வழியே, ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்களில் மட்டுமே சேர முடியும் என, மாணவ, மாணவியர் நினைக்கின்றனர். அது தவறு. நாட்டில், ஜே.இ.இ., மதிப்பெண்களை வைத்து, ஐ.ஐ.டி., உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதில், சேரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம்.

தற்போது, ஜே.இ.இ., மற்றும் 'நீட்' நுழைவு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்களை முழுமையாக படிக்காமல், முழு பாடத்துக்கான, மாதிரி தேர்வுகளை எழுதுகின்றனர். இது தவறானது.

முழு பாடங்களை படிக்காதவர்கள், மாதிரி தேர்வுகளை எழுத வேண்டாம். வீட்டில் இருந்து முழுதும் படியுங்கள். அதுவே, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற உதவும். நாளொன்றுக்கு, 16 மணி நேரம், மாணவர்கள் படிக்க வேண்டும்.

மேலும், நுழைவு தேர்வில், எளிய வினாக்களுக்கு, முதலில் பதில் அளிக்க வேண்டும். கடைசியாக, கடினமாக வினாக்களுக்கு பதில் அளிக்கலாம். புத்தகங்களையும், பெற்றோர்களையும், உயிருக்கு மேலாக நேசித்தவர்கள், தோற்றதாக சரித்திரம் இல்லை.

- கல்வி ஆலோசகர் அஸ்வின்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us