தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாறி வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப கற்றுக்கொண்டே இருக்கணும்

மாறி வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப கற்றுக்கொண்டே இருக்கணும்

மாறி வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப கற்றுக்கொண்டே இருக்கணும்


மார் 31, 2026 12:28 PM

மார் 31, 2026 12:28 PM

Follow on GoogleFavourite on Google

மார் 31, 2026 12:28 PM மார் 31, 2026 12:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தற்போது, கல்லுாரிகளில் உள்ள படிப்புகளின் வாயிலாக, மாணவர்களின் வாழ்க்கைக்கு என்ன பயன் என்ற கேள்வியும், பயமும் எழுகிறது. கல்வி நிலையங்களில், மாணவர்களை முத்துக்கள் போல் பட்டை தீட்டுகிறோம் எனக்கூறி, தங்களுக்கு தெரிந்த அனைத்தையும் மாணவர்கள் மீது திணித்து அவர்களின் ஆசையை மாற்றி விடுகின்றனர்.

அப்படி இல்லாமல், அவர்களின் ஆசையை அறிந்து, அவர்களுக்குள் இருக்கும் திறமையை மேலும் வளர்க்க வேண்டும். அதுவே இனி வரும் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கல்வி முறை.

பொருட்களுக்கு என கால அளவு உள்ளது போல, நீங்கள் படித்து வாங்கும் டிகிரிக்கும் கால அளவு உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை டெக்னாலஜி மாறிக்கொண்டே வருகிறது. படித்து முடித்துவிட்டோம். அதை வைத்து, வாழ்க்கையை நகர்த்தலாம் என்ற காலம் முடிந்துவிட்டது. வாழ்க்கை முழுதும் நீங்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

'ஆசிரியரிடமிருந்து கால் பகுதி; தன் முயற்சியினால் கால் பகுதி; சக நண்பர்களிடமிருந்து கால் பகுதி; அனுபவத்தின் வாயிலாக மீதி கால் பகுதியும் வரும்' என, சமஸ்கிருத சுலோகம் கூறுகிறது. இந்த முறையை கடைப்பிடிப்போர் வாழ்வில் நிச்சயம் சாதிப்பர்.

- 'ஜோ ஹோ' நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us