/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
தொழில்நுட்பம் குறித்த அச்சம் வேண்டாம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி
/
தொழில்நுட்பம் குறித்த அச்சம் வேண்டாம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி
தொழில்நுட்பம் குறித்த அச்சம் வேண்டாம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி
தொழில்நுட்பம் குறித்த அச்சம் வேண்டாம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி
பிப் 21, 2025 12:00 AM
பிப் 21, 2025 12:00 AM

மத்திய அரசால் பல கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவால் பல ஆண்டு ஆய்வுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களை புதிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது. அவற்றில் உள்ள நன்மைகளை உணர்ந்து கல்வி நிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து.
அதிகரிக்கும் வாய்ப்புகள்
புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம், உயர்நிலை பணிகளை மேற்கொள்ளும் திறன்படைத்தவர்களால் பணியாளர்கள் மாற்றம் செய்யப்படுகிறார்கள். வங்கிகள், ஹெல்த் கேர் போன்ற துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் மகத்தான பணிகளை செய்கின்றன. புதிய தொழில்நுட்பங்களால் ஒரு சில இடங்களில் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்ற போதிலும், பொதுவாக நவீன தொழில்நுட்பங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவே செய்கின்றன.
உதாரணமாக, வங்கிகளை எடுத்துக்கொண்டேமேயானால் 1980ம் ஆண்டுகளில் பிரிட்டன் அரசு கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியபோது, பணியாளர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தன. அப்போதைய பிரிட்டன் பிரதமர் புத்திசாலித்தனமாக செயல்பட்டார். கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, மான்செஸ்டர் போன்ற பல்கலைக்கழக பேராசியர்களை வங்கி பணியாளர்களை சந்தித்து, எவ்வாறு தொழில்நுட்பம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பது அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அதேபோன்ற சூழலில் இந்தியாவிலும் 1984ம் ஆண்டு நிலவின. கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு வங்கி துறையில் பல மடங்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததை நம்மால் பார்க்க முடிகிறது. ஆகவே, புதிய தொழில்நுட்பத்தை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும், தொழில்நுட்பங்களால் ஒரு குறிப்பிட்ட துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பயனடையவே செய்கின்றனர்.
சிறந்தவர்களை போற்றுங்கள்!
கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் குறிப்பிட்ட துறைக்கு மட்டுமின்றி அந்த நாட்டிற்கே பயனுள்ளதாக உள்ளன. அமெரிக்க உட்பட சில அயல்நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றன. நாம் அத்தகைய இடத்தை பிடிக்கவில்லை என்றபோதிலும், 'கூகுள்' போன்றதொரு கண்டுபிடிப்பு நம் நாட்டில் இல்லை என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
மாறாக, சிறப்பாக செயல்படுபவர்களிடம் நாம் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்; சிறந்த கண்டுபிடிப்பாளர்களை போற்றுதல் வேண்டும்; அவர்களை மதிக்க வேண்டும்; மனிதநேயத்துடனும், பணிவுடன் செயல்பட வேண்டும். நம்முடைய உழைப்பை சிறந்த முறையில் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்வோமேயானால், வரும் காலங்களில் சிறப்பான கண்டுபிடிப்புகளை நாமும் உலகிற்கு தருவோம். ஒரு நாள் நாமும் முதல் இடத்தை பிடிப்போம்!
- நாராயணமூர்த்தி, இணை நிறுவனர், இன்போசிஸ்

