sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நீட் யு.ஜி., - 2025

/

நீட் யு.ஜி., - 2025

நீட் யு.ஜி., - 2025

நீட் யு.ஜி., - 2025


பிப் 24, 2025 12:00 AM

பிப் 24, 2025 12:00 AM

Google News

பிப் 24, 2025 12:00 AM பிப் 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளை படிக்க அவசியம் எழுத வேண்டிய தேர்வு, 'நீட் - யு.ஜி.,'

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை நடத்துகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் - யு.ஜி., தேர்வும், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு நீட் - பி.ஜி., தேர்வும் தனித்தனியாக நடத்தப்படும் நிலையில் தற்போது, நீட்- யு.ஜி., தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

படிப்புகள்:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., பி.வி.எஸ்சி., மற்றும் பி.எஸ்சி.,-நர்சிங்

கல்வி நிறுவனங்கள்:
எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உட்பட இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனமும் 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை வழங்குகின்றன.

தேர்வு முறை:

இயற்பியல், வேதியியல், ஆகிய பாடங்களில் தலா 45 கேள்விகளும், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடத்தில் 90 கேள்விகளும் என மொத்தம் 180 கேள்விகள் இடம் பெறுகின்றன. கேள்விகள் அனைத்தும் 'மல்டிபில் சாய்ஸ்' வடிவிலேயே கேட்கப்படுகின்றன.

மதிப்பெண் விபரம்:

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் பிடித்தம் செய்யப்படுகிறது.

கேள்வித் தாள்கள்:

ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய மொழிகளில் கேள்விகள் இடம்பெறும்.

தேர்வு நேரம்:

பிற்பகல் 2 - 5:00 மணிவரை. மொத்தம் 180 நிமிடங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
https://neet.ntaonline.in/frontend/web/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மார்ச் 7

தேர்வு நடைபெறும் நாள்:

மே 4

விபரங்களுக்கு:

https://neet.nta.nic.in/






      Dinamalar
      Follow us