/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இந்தியாவில் வேலை வாய்ப்பு ஒரு பிரச்சனையே அல்ல!
/
இந்தியாவில் வேலை வாய்ப்பு ஒரு பிரச்சனையே அல்ல!
டிச 03, 2025 11:18 PM
டிச 03, 2025 11:18 PM

கடந்த 2009ல் ராஜ்கோட்டில் துவக்கப்பட்ட மார்வாடி கல்வி நிறுவனம், தொடர் வளர்ச்சிக்கு பிறகு, 2016ம் ஆண்டில் குஜராத் அரசால், பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது.
மார்வாடி பல்கலைக்கழகத்தில் 'சாய்ஸ் பேஸ்டு கிரெடிட்' முறை பின்பற்றப்படுவதோடு, கல்வி நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப பாடத்திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் கேங்டாக் வரையிலும் சிறந்து விளங்கும் பேராசிரியர்கள் இப்பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
300 மாணவ, மாணவியருடன் துவக்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் தற்போது நாடு முழுவதிலும் 26 மாநிலங்கள் மற்றும் 54 வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 17 ஆயிரம் பேர் கல்வி பயிலுகின்றனர். இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், ஹெல்த் அலைடு ஆகிய துறைகளின் கீழ் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு 15 மாணவ, மாணவியருக்கும் ஒரு பேராசிரியர் 'மெண்டார்' ஆக செயல்படுகிறார். ஆராய்ச்சி மாணவ, மாணவியர் மட்டுமின்றி இளநிலை பட்டப்படிப்பு பயில்பவர்களும் முழுநேர செயல்முறை பயிற்சி மற்றும் ஆய்வு செயல்முறைகளை மேற்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை வகுத்துள்ளோம். பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.
அனைத்து மாணவ, மாணவியருக்கும் மூன்றாம் பருவத்தில் இருந்து சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். தொழில் துறையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாணவ, மாணவியரின் திறன்களை மேம்படுத்துகிறோம். அயல்நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகத்தில் 6 மாத காலம் கல்வி பெறும் வகையிலான 'எக்ஸ்சேன்ஜ்' வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் வேலை வாய்ப்பு ஒரு பிரச்சனையே அல்ல. சரியான திறன் இருந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். ஏழாம் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் அத்தகைய திறன்களை வேலை வாய்ப்பை எதிர்நோக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் பெறுகின்றனர். வாய்ப்புகள் மிகுந்த துறை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்து படிப்பதும் அவசியம். உதாரணமாக, குஜராத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
-பேராசிரியர் ஆர்.பி.ஜடேஜா, புரொவொஸ்ட், மார்வாடி பல்கலைக்கழகம், ராஜ்கோட், குஜராத்.

