sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

தொலைநிலை கல்வியில் சேர விண்ணப்பித்தல்...

/

தொலைநிலை கல்வியில் சேர விண்ணப்பித்தல்...

தொலைநிலை கல்வியில் சேர விண்ணப்பித்தல்...

தொலைநிலை கல்வியில் சேர விண்ணப்பித்தல்...


ஜன 10, 2014 12:00 AM

ஜன 10, 2014 12:00 AM

Google News

ஜன 10, 2014 12:00 AM ஜன 10, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொலைநிலைக் கல்வியில் சேர விரும்பும் ஒருவர், வருடத்தில் குறைந்தபட்சம் 2 முறை சேர்க்கை வாய்ப்புகளைப் பெறுகிறார். இதுதான் அக்கல்வி முறையின் சிறப்பே.

ரெகுலர் முறையிலான படிப்புகளுக்கான சேர்க்கைகள், பொதுவாக, வருடத்தின் மே அல்லது ஜுன் மாதங்களில் துவங்கும். Prospectus விற்பனையுடன் துவங்கும் அந்த செயல்பாடு, ஜுலை முதல் வாரத்தில் நிறைவடையும். எனவே, ஒருவர் அந்த காலகட்டத்தில் விண்ணப்பித்தலை தவறவிட்டுவிட்டால், அவர் அடுத்த ஒரு வருடத்திற்கு காத்திருக்க வேண்டும்.

ஆனால், தொலைநிலைக் கல்வி முறையில் அந்தப் பிரச்சினை இல்லை. ஏறக்குறைய வருடம் முழுவதும் சேர்க்கை செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். நுழைவுத்தேர்வு தேவைப்படாத படிப்புகளில், தொலைநிலைக் கல்வியை மேற்கொள்ள விரும்புவோருக்கு, இக்னோ ஆண்டு முழுவதும் வாய்ப்புகளை வழங்குகிறது.

வருடத்திற்கு இரண்டு முறை சேர்க்கைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலான பல்கலைகளில் வழங்கப்படுகின்றன. ஜுலை சேர்க்கை மற்றும் ஜனவரி சேர்க்கை என்று அவை இரண்டு பிரிவுகளாக இருக்கின்றன. ஜனவரி சேர்க்கையை காலண்டர் ஆண்டு சேர்க்கை என்றும், ஜுலை சேர்க்கையை, அகடமிக் ஆண்டு சேர்க்கை என்றும் அழைக்கின்றனர்.

ஒருவர், ஜுலை மாத சேர்க்கை செயல்பாட்டின் கடைசித் தேதிக்குள் சேர்க்கை பெற்றுவிட்டால், அவர் அகடமிக் சேர்க்கைப் பிரிவில் வருவார். அதேசமயம், அந்த கடைசித் தேதியை தாண்டி சேர்க்கை பெறும் ஒருவர், காலண்டர் ஆண்டு சேர்க்கைப் பிரிவில் வருவார். அதேசமயம், பணம் கட்டினால் புத்தகங்கள் முன்கூட்டியே அவருக்கு கிடைத்துவிடும்.

இதனால், தேர்வுக்கு பல மாதங்கள் முன்பே, அவர் தனக்கான புத்தகங்களைப் பெற்றுவிடுவார். இதனால் படிப்பதற்கு அவருக்கு அதிக கால அவகாசம் கிடைக்கிறது.

அகடமிக் ஆண்டு சேர்க்கைப் பெற்றவருக்கான தேர்வுகள் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் நடத்தப்படும். ஆனால் அப்போது தேர்வுகளை எழுதாத நபர்கள், அத்தேர்வை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எழுதிக் கொள்ளலாம்.

அதேபோல், காலண்டர் ஆண்டு சேர்க்கைப் பெற்றவர்களுக்கான தேர்வு, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத காலகட்டங்களில் நடத்தப்படும். அந்த காலகட்டத்தில் தங்களின் தேர்வை எழுதாதவர்கள், ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் எழுதிக் கொள்ளலாம்.

தொலைநிலை சேர்க்கையின்போது தேவைப்படும் ஆவணங்கள்

கல்வி நிறுவனத்திற்கு ஏற்ப, இவற்றில் சில மாறுபாடுகள் இருக்கும். பொதுவாக, இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுபவர்கள், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ்(Transfer Certificate) உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிமாநில மாணவராக இருந்தால், அவர் குடியேற்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். சில கல்வி நிறுவனங்கள் பிறப்பு சான்றிதழையும் கேட்கின்றன.

முதுநிலைப் படிப்பில் சேர்வோர், தங்களின் இளநிலைப் பட்டப் படிப்பில் பெற்ற தற்காலிக சான்றிதழ்(Provisional Certificate), மதிப்பெண் சான்றுகள்(Mark Sheets), மாற்றுச் சான்றிதழ்(Transfer Certificate) மற்றும் பட்டச் சான்றிதழ்(Convocation Certificate) உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சேர்க்கைப் பெற செல்லும்போது, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். ஒரே பல்கலையில் இளநிலைப் படித்து, அதே பல்கலையில் முதுநிலைப் படிப்பிற்கு விண்ணப்பித்தால், கட்டணச் சலுகையை சில பல்கலைகள் வழங்குகின்றன.






      Dinamalar
      Follow us