தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/விமர்சனத்தை கையாள்வது எப்படி?

விமர்சனத்தை கையாள்வது எப்படி?

விமர்சனத்தை கையாள்வது எப்படி?


நவ 13, 2026 09:32 AM

நவ 13, 2026 09:32 AM

Follow on GoogleFavourite on Google

நவ 13, 2026 09:32 AM நவ 13, 2026 09:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர்வு, வகுப்பறை பிரசென்டேஷன், ஆசிரியர்களின் கருத்து, நண்பர்களின் கிண்டல் என மாணவர் பருவத்தில் அன்றாடம் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு, சிறிய விமர்சனம் கூட பெரும் சுமையாக மாறிவிடுகிறது. ஆனால், விமர்சனங்கள் என்பது நம்மை தாழ்த்துவதற்காக அல்ல. மாறாக நம்மை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நிதானம்


யாருமே தங்களை பற்றித் தவறாக கூறுவதை விரும்புவதில்லை. ஆசிரியர் அல்லது சக மாணவர் ஒருவர் நம்மிடம் குறை கூறும் போது, உடனே கோபப்படுவதோ அல்லது எதிர்த்துப் பேசுவதோ இயற்கையான மனநிலை தான்.

இருப்பினும், விமர்சனம் வந்தவுடனே சட்டென்று எதிர்வினை ஆற்றாமல், சில நொடிகள் அமைதி காப்பது மிகவும் அவசியம். ஆழ்ந்த மூச்சு எடுத்துக் கொண்டு அந்தச் சூழலை அணுகும் போது, கோப உணர்ச்சி குறைந்து நிதானம் வரும்.

மாணவர்கள் மனதளவில் சோர்ந்துபோய் இருக்கும் போதோ அல்லது கடுமையான தேர்வுகளின் அழுத்தத்தில் இருக்கும் போதோ, ஒரு சிறிய எதிர்மறைச் சொல்லும் பெரிய காயத்தை உண்டாக்கும். 'நாம் எதற்குமே லாயக்கில்லை' என்ற எண்ணத்தை மனநலப் பாதிப்புகள் உருவாக்கக்கூடும்.

இத்தகைய தருணங்களில், விமர்சனம் என்பது நம் நடத்தையையோ அல்லது நாம் செய்த வேலையையோ பற்றியதே தவிர, நம் சுயமரியாதையையோ அல்லது நமது தனிப்பட்ட மதிப்பையோ பற்றியது அல்ல என்பதைத் தெளிவாகப் பிரித்து பார்க்க பழக வேண்டும்.

பகுப்பாய்வு


நம்மிடம் தெரிவிக்கப்படும் கருத்து எதுவாக இருந்தாலும், அதில் உண்மையிலேயே நமக்கு உதவக்கூடிய விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

இது நம் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளத் தரப்பட்ட ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதலா, அல்லது வேண்டுமென்றே நம்மைத் தாழ்த்துவதற்காகச் சொல்லப்பட்ட கசப்பான பேச்சா என்பதைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஆக்கப்பூர்வமான கருத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவையை கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.

ஆசிரியர் அல்லது நண்பர்கள் தரும் கருத்து தெளிவாக புரியவில்லை என்றால், அமைதியாக அவர்களிடம் விளக்கங்களைக் கேட்கலாம். "நான் இதில் மேலும் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்வியை முன்கூட்டியே கேட்பது, நம்மிடம் இருக்கும் கற்றல் ஆர்வத்தைக் காட்டும். இதன் மூலம் தேவையற்ற சந்தேகங்களும் மனக்கசப்புகளும் தவிர்க்கப்பட்டு, சரியான முறையில் நம் திறனை உயர்த்திக் கொள்ள முடியும்.

புத்துணர்ச்சி


சில நேரங்களில் விமர்சனங்களால் எழும் மன அழுத்தத்திலிருந்து சற்று விலகி இருப்பது தவறில்லை. உங்களை மகிழ்விக்கும் புத்தகங்களைப் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, நண்பர்களிடம் பேசுவது அல்லது சிறிது நேரம் இயற்கை சூழலில் நடப்பது போன்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்பலாம். மனதை அமைதிப்படுத்தி, புத்துணர்ச்சி பெற்ற பிறகு மீண்டும் உங்கள் படிப்பிலும், இலக்குகளிலும் கவனம் செலுத்தலாம்.

ஒவ்வொரு பெரிய வெற்றியாளரும் பல ஆயிரம் விமர்சனங்களைக் கடந்தே வந்துள்ளனர். விமர்சனங்களைக் கண்டு பயப்படாமல், அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு முன்னேறப் பழகினால், வாழ்க்கையில் எந்தச் சவாலையும் நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us